மும்பை: சிலருக்கு இத்துடன் வாழ்க்கை முடிந்துவிட்டது என எண்ணும் போது தான் வாழ்க்கை தொடங்குகிறது. அப்படி வாழ்க்கையே முடிந்துவிட்டது என எண்ணி தற்கொலைக்கு முயன்றவர் இப்போது இந்திய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார் கல்பனா சரோஜ்.
கல்பனா சரோஜ் 1961 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர். இவருக்கு இரண்டு தம்பிகள் மற்றும் இரண்டு தங்கைகள் இருந்தனர். இவருக்கு 12 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டதாம். திருமணம் என்றால் என்ன என்று கூட தெரியாத அந்த வயதில் மண வாழ்க்கையில் சென்று கணவரின் குடும்பத்தினரால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி பின்னர் பெற்றோரிடமே வந்து விட்டார்.

அந்த காலகட்டத்தில் கிராமத்தில் இருந்தவர்கள் இவரது நிலை குறித்து கேலியும் கிண்டலுமாக பேச அந்த வயதிலேயே அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார், பின்னர் அவருடைய பெற்றோர் அவரை மீட்டு உறவினரோடு வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டார்களாம் . அந்த வகையில் மும்பை நகரத்திற்கு வருகை தந்த சரோஜ், கார்மெண்ட்ஸில் வேலை செய்ய தொடங்கினார் . பின்னர் அந்த தொழிலை கற்றுக்கொண்டு சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸை நிறுவினார்.
முதலில் கார்மெண்ட்ஸில் டெய்லராக வேலைக்கு சென்ற போது வெறும் 60 ரூபாய் தான் இவருக்கு மாத சம்பளம். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைப்பாராம். அப்படி தான் கார்மெண்ட்ஸை தொடங்கினார். பின்னர் மரச்சாமான்கள் கடையை நிறுவினார். பல்வேறு துறைகளில் தொழிலை விரிவாக்கம் செய்து வந்தார். அப்போது தான் கமானி டியூப்ஸ் என்ற நஷ்டத்தில் இயங்கி வந்த நிறுவனத்தை வாங்கினார்.
கமானி டியூப்ஸ் என்பது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனமாகும். 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் காப்பர் ட்யூபுகள் மற்றும் ராடுகள், எல்இடி லைட்டுகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனத்தை கல்பனா சரோஜ் 2006 ஆம் ஆண்டு கையகப்படுத்தினார்.
பெரிய அளவில் கடனில் சிக்கி தவித்து மூன்று ஆண்டுகளாக ஊழியர்களுக்கு ஊதியம் கூட தர முடியாமல் இருந்தது. அப்படி நஷ்டத்தில் இருந்து நிறுவனத்தை வாங்கி படிப்படியாக அதனை வளர்த்து தற்போது லாபமான நிறுவனமாக மாற்றியமைத்துள்ளார். இத்துடன் இவர் நின்றுவிடவில்லை, கே.எஸ் ஃபிலிம் புரொடக்ஷன் என்ற பெயரில் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தார்.
தற்போது 112 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு கொண்டவராக இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்றிருக்கிறார் ,மத்திய அரசின் பாரதிய மகிளா வங்கி என்ற பெண்களுக்கான பிரத்தியேக வங்கியின் இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வெற்றிகள் மூலம் பெண்களுக்கு முன் உதாரணமாக தொடர்ந்து உழைத்து வருகிறார்.
Story written: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications