தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுங்கக் கட்டணத்தைக் குறைத்தது தொடர்ந்து, இன்று இரண்டாவது நாளாகப் பங்குச்சந்தையில் இருக்கும் தங்கம் மற்றும் வைர நகை நிறுவனப் பங்குகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணமாக உள்ளது. இதிலும் குறிப்பாகக் கேரளா-வை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தாறுமாறு உயர்வை பதிவு செய்துள்ளது.
சுங்க வரி குறைப்பு காரணமாக உள்நாட்டு ரீடைல் சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட கிராமுக்கு 350 ரூபாய் நேற்றும்- இன்றும் குறைந்துள்ளது. இவ்வளவு பெரிய வாய்ப்பை மக்கள் கட்டாயம் மிஸ் செய்யமாட்டார்கள் என்பதால் இந்திய சந்தையில் தங்க நகை வாங்குவது அதிகரிக்கும் என்பதை கணித்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக தங்க நகை கடை பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக நேற்றைய வர்த்தகத்தில் தங்க நகை நிறுவனங்களின் பங்குகள் 8% வரை உயர்ந்தன, இந்த உயர்வு இன்றைய வர்த்தகத்திலும் தொடர்ந்தது. இதில் முக்கியமாக இன்று கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 633.35 என்ற புதிய வரலற்று உச்சத்தை எட்டியுள்ளன. இது நேற்றைய விலையை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது, இன்றைய வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்திலேயே 52 வார உச்சத்தைத் தொட்ட பங்குகள் அடுத்த சில நிமிடங்களில் 570 ரூபாய் வரையில் குறைந்தது.
இதேபோல் மோடிசன்ஸ் (Motisons) நிறுவனத்தின் பங்குகள் 7% உயர்ந்து ₹165.75 ஐ தொட்டன, RBZ ஜுவல்லர்ஸ் மற்றும் PC ஜுவல்லர்ஸ் நிறுவனங்களின் பங்குகள் 5% என்ற அப்பர் சர்கியூட் அளவீட்டை எட்டின. மேலும் தமிழ்நாட்டின் தங்கமயில் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய 8% உயர்வுக்குப் பிறகு, இன்றும் 3.5% அதிகரித்துள்ளன.
இந்திய நகை கடை வர்த்தக துறையில் முடிசூடா மன்னனாக இகுக்கும் டைட்டன் நிறுவனத்தின் பங்குகளும் 2.5% உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
| Company Name | Last Price | % Change | 52 wk High | 52 wk Low | Market Cap (Rs. cr) |
| Titan Company | 3,499.10 | 0.89 | 3,885.00 | 2,882.60 | 310,645.26 |
| Kalyan Jeweller | 588.15 | 6.39 | 633.35 | 162.75 | 60,615.53 |
| Rajesh Exports | 319.9 | 1.12 | 559.8 | 259.25 | 9,445.37 |
| Senco Gold | 982.3 | -0.53 | 1,176.80 | 365.2 | 7,632.88 |
| Thangamayil | 1,933.65 | 1.73 | 1,965.00 | 851.75 | 5,305.77 |
| Vaibhav Global | 318.85 | 0.36 | 543.05 | 263.05 | 5,290.01 |
| PC Jeweller | 77.86 | 4.99 | 77.86 | 25.45 | 3,623.63 |
| Sky Gold | 2,251.85 | 5 | 2,298.00 | 250.25 | 2,980.82 |
| D. P. Abhushan | 1,310.55 | 0.03 | 1,622.75 | 10 | 2,963.27 |
| Goldiam Inter | 190.35 | 3.23 | 216.55 | 120.05 | 2,032.85 |
| Motisons Jewell | 162.75 | 5.34 | 246.19 | 55 | 1,602.21 |
| Asian Star | 844.9 | 2.46 | 1,046.40 | 691.05 | 1,352.41 |
| Khazanchi Jewel | 459 | 0.86 | 469 | 140 | 1,135.88 |
| Tribhovandas | 159 | 2.38 | 163.9 | 83.52 | 1,061.02 |
| Renaissance | 101.4 | 1.81 | 146 | 93.1 | 974.77 |
| Radhika Jewel | 69 | 8.76 | 76 | 31 | 814.2 |
| Starlineps Ent. | 133.3 | 0.79 | 159 | 83.3 | 576.26 |
| RBZ Jewellers | 140.55 | 4.97 | 255.35 | 95 | 562.2 |
செவ்வாய்க்கிழமை பட்ஜெட் தாக்கலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான அடிப்படை சுங்க வரி 6% ஆகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். முன்னதாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15% ஆக இருந்தது.
இந்த 15 சதவீத வரியில் 10% அடிப்படை சுங்க வரியும், 5% வேளாண்மை உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரி (Agricultural Infrastructure Development Cess) அடங்கும். புதிய பட்ஜெட் அறிவிப்பின்படி, தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் 5% அடிப்படை சுங்க வரியும், 1% வேளாண்மை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி (AIDC) விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மொத்த இறக்குமதி வரி 6% ஆகக் குறைந்துள்ளது.
இந்தக் கொள்கை மாற்றத்தால், தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, நகை விற்பனை அதிகரித்து, நகை நிறுவனங்களின் லாபம் உயரும். இதுவே, இந்தக் தங்கம் மற்றும் வைர நகை கடைகளின் நிறுவன பங்குகளின் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications