ரூ.43,000 கோடி மதிப்பிலான சொத்தை கொடுக்க தயாராகும் கபில் வாதவன்.. DHFL மோசடியில் செம திருப்பம்..!

திவான் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்த இறுதி அறிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், தணிக்கையாளர் கிராண்ட் தோர்டன், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிரதி நிதியிடம் சமர்பித்தார்.

அதன் மூலம் நூற்றுக் கணக்கான கற்பனையான கடன் கணக்குகள் மூலம், 14,046 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்தது.

மேலும் இந்த முறைகேடான கடன்கள் சுழற்சி முறையில் (round tripping) கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது. கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கியால், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரான ஆர் சுப்ரமணியகுமார் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டார்.

வெளிசத்திற்கு வந்த மோசடிகள்

வெளிசத்திற்கு வந்த மோசடிகள்

அதோடு அந்த அறிக்கை போலியாக வீட்டுக்கடன் வாங்கிவர்களின் பெயர்கள் எவ்வாறு சேகரிக்கப்பட்டது என்பதையும் தெளிவாக சுட்டிக் காட்டியது. அதாவது மூடப்பட்ட கணக்குகளிலிருந்து தோராயமாக எடுக்கப்பட்டதாகவும் கூறியது. மொத்தத்தில் 2007 - 2019க்கு இடையில் பாந்த்ரா கிளையில் 2,60,315 போலி கணக்குகள் மற்றும் கற்பனையான வீட்டுக்கடன் கணக்குகள் உருவாக்கப்பட்டன. அதோடு 11,755.79 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

எந்த பிணையமும் இல்லை

எந்த பிணையமும் இல்லை

மேலும் தணிக்கையாளரின் அந்த இறுதி அறிக்கையில் 91 நிறுவனங்கள் மையகமாக உள்ளது எனவும் தெரிவித்தது. இவற்றிற்கு கடன் வழங்குவதற்கு முன்பு எந்தவொரு பாதுகாப்பு ஆவணமோ அல்லது பிணையமோ பெறப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டது. இவர்களின் 50 பேரின் கடன் தொகையானது, மொத்த பாந்தரா கடன் விநியோகத்தில் 70% உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு போலியாக மோசடி செய்யப்பட்டு பெறப்பட்ட தொகையானது 34 நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஒன்றுக்கொன்று தொடர்பு

ஒன்றுக்கொன்று தொடர்பு

மேற்கண்ட இந்த 34 நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திவான் ஹவுஸிங் புரோமோட்டர்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது. பல சந்தர்பங்களில் வழங்கப்பட்ட நிதிகள் புரோமோட்டர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு திருப்பிட விடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்தது.

குறைவான வட்டி விகிதம்

குறைவான வட்டி விகிதம்

குறிப்பாக பாந்த்ரா கிளையில் கடன் வாங்கியவர்கள் பலர் பொதுவான முகவரியினை பயன்படுத்தியுள்ளனர். அதோடு பாந்த்ரா கிளையில் இருந்து கொடுக்கப்பட்ட கடன்களுக்கு குறைவான வட்டியே வசூலிக்கப்பட்டது. ஆக மேற்கண்ட இது போன்ற பல காரணகள், அனைத்தும் இந்த நிறுவனத்தினை திவால் நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது.

தொடர்பில் உள்ளனர்

தொடர்பில் உள்ளனர்

பாந்திரா கடன் புத்தகத்தில் உள்ள நிறுவனங்களுக்கும், புரோமோட்டர்களுக்குமான தொடர்புகள் பல சந்தர்பங்களில் தெளிவாக தெரிகிறது. உதாரணத்திற்கு வாதவன் சகோதரர்கள் அல்லது அவர்களின் உறவினர்கள், இந்த நிறுவனங்களில் இயக்குனர்கள் அல்லது விளம்பரதாரர்களாக மாறியுள்ளனர். மேலும் இந்த நிறுவனங்கள் மோசடி செய்வதற்காகவே வழித்தடமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.43,000 கோடி மதிப்பிலான சொத்து

ரூ.43,000 கோடி மதிப்பிலான சொத்து

முன்னதாக டிஹெச்எஃப்எல் நிறுவனத்திலிருந்து முறைகேடாக பணத்தினை மற்ற நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதில் கபில் வாதவனுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அமலாக்க இயக்குனரகம் கூறியது. இந்த நிலையிலேயே அவர் கைதும் செய்யப்பட்டார். இந்த நிலையில் DHFL புரோமோட்டர், கபில் வாதவன், தனக்கும் தனது குடும்பத்திற்கும் சொந்தமாக 43,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிர்வாகிக்கு கடிதம்

நிர்வாகிக்கு கடிதம்

இது கடன் வழங்குனர்களின் கடனை திரும்ப செலுத்துவதற்காக, இதனை கொடுப்பதாகவும் கபில் வாதவன், அக்டோபர் 17ம் தேதியன்று ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட நிர்வாகி ஆர் சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது காவலில் உள்ள வாதவன், பல சொத்துகளை பரிமாற்றம் செய்யவும் முன்மொழிந்துள்ளார் என பிசினஸ் டுடே செய்திகள் தெரிவித்துள்ளன.

மோசமான நிதி நெருக்கடி

மோசமான நிதி நெருக்கடி

ஜூஹு கல்லி திட்டம் (Juhu Galli project) மற்றும் இர்லா திட்டங்களின் (Irla project) மதிப்பு 43,879 கோடி ரூபாயாகும். இதன் சந்தை மதிப்பு 15% குறைவாக இருக்கும் என்றும் அக்டோபர் 17 தேதியிட்ட கடித்தத்தில் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், செப்டம்பர் 2018க்கு பிறகு IL & FS நெருக்கடிக்கு பின்னர், டிஹெச்எஃப்எல் மட்டும் அல்ல அனைத்து நிதி நிறுவனங்களும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.

கடனை செலுத்தியுள்ளோம்

கடனை செலுத்தியுள்ளோம்

அந்த வகையில் டிஹெச்எஃப்எல் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து 44,000 கோடி ரூபாய் கடன்களை திருப்பி செலுத்தியதாகவும் வாதவன் கூறியுள்ளார். ஏன் இன்றைய நிலையில் கூட, டிஹெச்எஃப்எல் வசூல் 10,000 - 15,000 கோடி ரூபாய்க்கு இடையில் உள்ளது என்று 9 பக்க கடிதத்தினை வாதவன் அனுப்பியுள்ளராம்.

மோசடி செய்யப்பட்ட நிதிகள் சொத்தின் மூலம் திரும்ப பெறப்படுமா? ரிசர்வ் வங்கி என்ன செய்ய போகிறது? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+