பாலிவுட் உலகில் பிரபல நட்சத்திரமாக இருப்பவர் தான் கரிஷ்மா கபூர். இவருக்கும் பிரபல தொழிலதிபரான சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு இவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.
சஞ்சய் கபூரை பொறுத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரியா சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். சஞ்சய் கபூர் ஒரு தொழிலதிபர் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்டவர். இதற்கிடையே 53 வயதான சஞ்சய் கபூர் கடந்த ஜூன் மாதம் லண்டன் சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சஞ்சய் கபூரின் இந்த திடீர் மறைவு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது இந்த குடும்ப வாரிசுகள் மத்தியில் பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. அதாவது சஞ்சய் கபூரின் 30,000 கோடி ரூபாய் சொத்து யாருக்கு சொந்தம் என்பதில் சிக்கல் உண்டாகி இருக்கிறது. சஞ்சய் கபூருடன் வாழ்ந்து வந்த பிரியா சச்தேவ் சொத்து தனக்கும் தன் மகனுக்குமே சாரும் என கூறுகிறார். இதற்கு ஆதாரமாக சஞ்சய் கபூரின் உயிலை அவர் முன் வைக்கிறார்.
ஆனால் சஞ்சய் கபூர் -கரீஷ்மா கபூர் தம்பதிக்கு பிறகு சமைரா மற்றும் கியான் தாங்களே அந்த சொத்துக்களுக்கு வாரிசு என கூறுகின்றனர். வார்த்தை மோதலாக இருந்த இந்த சொத்து பிரச்சினை தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. கரீஷ்மா கபூரின் பிள்ளைகள் இருவரும் தந்தை சொத்தில் உரிமை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில் தங்களுடைய தந்தையின் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு தாங்களே வாரிசு என்றும் தங்களுக்கே அது சொந்தமாக வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் தன்னுடைய தந்தையுடன் தற்போது வாழ்ந்து வந்த பிரியா தந்தை எழுதி வைத்த உயிலை மாற்றி எழுதி மோசடி செய்திருக்கிறார் என்றும் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். உண்மையான உயிலை அவர்கள் யாரிடமும் காட்டவில்லை சட்டப்படி சொத்து எங்களுக்கே சேர வேண்டும், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அதில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே சஞ்சய் கபூரின் சகோதரியான மந்திரா கபூர் வெளியிட்டுள்ள செய்தியில் தன்னுடைய தாயாரை கட்டாயப்படுத்தி சில ஆவணங்களில் பிரியா கையெழுத்து பெற்று இருப்பதாக கூறியுள்ளார். சஞ்சய் கபூர் இறந்த சில நாட்களிலேயே இது நடந்ததாகவும் இரண்டு ஆவணங்களில் அவர்கள் கையெழுத்து பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இது எந்த மாதிரியான ஆவணங்கள் என்பதை எங்களிடம் தெரிவிக்க மறுக்கிறார் என குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications