கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, மத்திய அரசின் நியாயமற்ற வரிப் பகிர்வு குறித்து விவாதிக்கப் பெங்களூருவில் ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளார், இதற்காக 8 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு எப்போது நடக்கும், எங்கு நடக்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா-வின் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள், ஜிஎஸ்டி வரி வசூலை மாநிலங்களுக்குச் சமமான முறையிலும், திறம்படக் கட்டமைப்பின் கீழ் பகிர்ந்துகொடுப்பதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசிடம் வலியுறுத்த மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையை உருவாக்குவதை நோக்கம் கொண்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் மத்திய அரசிடம் டாக்டர் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு, பல மாநிலங்களுடன் நேரடியாக ஆலோசனை செய்து 16-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ள நிலையில், கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையாவிடம் இருந்து இந்த மாநாட்டுக்கான அழைப்பு வருகிறது.
அரவிந்த் பனகாரியா சமர்ப்பிக்கும் வரி பகிர்வு குறித்த பரிந்துரைகள் 2026-27 நிதியாண்டு முதல் அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்பதால் இந்த மாநாடு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களைத் தவிர, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களையும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
சித்தராமையா அனுப்பிய தனது கடிதத்தில், 15-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையில் ஜிஎஸ்டி வரி பகிர்வில் செயல்திறன் மற்றும் செயல்திறன் செலவிடு மத்தியிலான சமமான பங்கீடு கொடுக்கப்பட்டதால் அதிக ஜிடிபி மற்றும் அதிக வரி வசூல் கொண்ட மாநிலங்கள் மிகவும் குறைவான வரி பகிர்வை மத்திய அரசிடம் இருந்து பெற்றுப் பெற்று வருகின்றன.
16-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையில், மாநிலங்களின் செயல்திறன் மற்றும் செயல்திறன் செலவீடுக்கு மத்தியில் கட்டாயம் சமன்பாடு செய்ய வேண்டும் என்று சித்தராமையா தனது கடிதத்தில் வலியுறுத்தினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மொத்த வரி வருவாய்க்கு அதிகமான பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் நாட்டை பல வழிகளில் மேம்படுத்த உதவுகின்றன. எனவே, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் அதிக பங்கீட்டைக் கொண்ட மாநிலங்கள், அதிகப்படியான வரி பகிர்வு பெறுவதை 16-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையின் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக அரவிந்த் பனகாரியா தலைமையிலான ஆணையத்தின் முன் மாநிலங்கள் ஒருங்கிணைந்து ஒத்த கருத்துக்களை முன்வைக்க வேண்டியது அவசியம் என்று சித்தராமையா தனது கடிதத்தில் தெரிவித்து, செப்டம்பர் 10 தேதி கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
15-வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையின் படி ஜிஎஸ்டி வரி பகிர்வில் அதிகப்படியான இழப்புகளைச் சந்தித்த மாநிலங்களில் கர்நாடகா-வும் ஒன்றாகும். 14-வது நிதி ஆணையத்தின் கீழ் கர்நாடகா மாநிலம் 4.713% வரி பங்கு பெற்றிருந்த நிலையில், 15-வது நிதி ஆணையத்தின் கீழ் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டு 3.647% ஆக உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, 'எங்கள் வரி, எங்கள் உரிமை' பிரச்சாரத்தின் கீழ் இந்த பிரச்சினையைத் தொடர்ந்து ஜிஎஸ்டி கூட்டத்திலும், பிற நிதியமைச்சகம் சார்ந்த கூட்டத்திலும் எழுப்பி வருகிறது.
இந்த 8 மாநாட்டில் அழைக்கப்பட்ட முதல்வர்கள் கலந்துகொண்டால், மாநிலங்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விவாதித்து, சமமான மற்றும் திறமையான வரி பகிர்வு முறையைக் கொண்டு வர முடியும் என கர்நாடகா அரசு நம்புகிறது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications