மைசூர் சாண்டல் சோப்-க்கு இப்படியொரு நிலைமையா.. விவசாயிகளிடம் பணிந்த கர்நாடக அரசு..!!

என்னதான் புதுப்புது சோப்புகள் வந்தாலும் பாரம்பரியமான மைசூர் சாண்டல் சோப் இன்னும் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சோப்பை தயாரிப்பது கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (கே.எஸ்.டி.எல்.) நிறுவனம்.

இந்த சோப்பு வகைகளின் விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் சோப்புகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துத்தான் வருகிறது. சர்வதேச அளவில் இயற்கையான சந்தன எண்ணெய்யை சோப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் ஒரே உற்பத்தியாளர் நாங்கள் மட்டும் தான். அதனால் விலை அப்படித்தான் இருக்கும் என்று அந்நிறுவனம் தனது தரப்பு நியாயத்தை முன்வைக்கிறது. இப்ப பிரச்சனை சோப்புகளின் விலையை பற்றி அல்ல சந்தன எண்ணெய்யை பற்றியது.

மைசூர் சாண்டல் சோப்-க்கு இப்படியொரு நிலைமையா.. விவசாயிகளிடம் பணிந்த கர்நாடக அரசு..!!

கர்நாடகாவில் சந்தன மரங்களை வெட்டுவதும், கடத்துவதும் அதிகரித்து வருவதால், அந்நிறுவனத்துக்கு முக்கிய மூலப்பொருளான சந்தன எண்ணெய் கிடைப்பதில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனையடுத்து, பிற நாடுகளில் இருந்து அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது.

தற்போது இந்நிறுவனம் ஆஸ்திரேலியாவில் இருந்து சந்தன எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த ஆண்டு 4,000 கிலோ சந்தன எண்ணெய் இறக்குமதி செய்தது அது இந்த ஆண்டு 7,000 கிலோவாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் சந்தன மரங்கள் தொடர்பாக ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு சந்தன மரம் எங்கு வளர்ந்தாலும் அது அரசுக்கு சொந்தமானது. கர்நாடகாவில் ஒரு வீட்டில் சந்தன மரத்தை வளர்த்தாலும் அது அரசுக்கு சொந்தமானதாக கருதப்படும்.

இதனால் விவசாயிகள் சந்தன மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். தற்போது, விவசாயிகள் சந்தன மரங்களை வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் சந்தன மரம் அரசுக்கு சொந்தம் என்ற சட்டத்தை கர்நாடக அரசு நீக்கியது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் சொந்த வயல்களில் சந்தன மரங்களை வளர்க்க வழி செய்துள்ளது.

இது தொடா்பாக, அம்மாநில பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.பி. பாட்டில் கூறுகையில், சந்தன மரம் எங்கு வளர்ந்தாலும் அது அரசின் சொத்து என்ற சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் தங்கள் வயல்களில் சந்தன மரங்களை வளர்க்க வசதி செய்துள்ளது.

அவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வளர்ச்சியடைந்த மரங்களை கர்நாடக வனத்துறை அல்லது கே.எஸ்.டி.எல். நிறுவனத்திடம் விற்கலாம். மாநிலத்தில் 700 விவசாயிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, 4,000 ஏக்கர் நிலத்தில் சந்தன மரங்களை வளர்க்க அரசாங்கம் ஒரு தோட்ட இயக்கத்தை தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

107 ஆண்டுகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கே.எஸ்.டி.எல். நிறுவனம் தற்போது நீண்ட காலத்திற்கு வணிகத்தை தக்க வைக்கும் நோக்கில் மைசூர் சாண்டல்ஸ் அக்வா என்ற பிராண்ட் மூலம் குடிநீர் வர்த்தகத்தில் களம் இறங்குகிறது.

இது தொடர்பாக அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறுகையில், ஷிவமோகாவில் செயல்படாத எண்ணெய் ஆலையில் குடிநீரை உற்பத்தி செய்து பேக்கேஜிங் செய்ய தொடங்கும். இது தவிர பெங்களூருவில் நிறுவனத்துக்கு சொந்தமான வளாகத்தின் ஒரு பகுதியை அலுவலகங்களுக்கான வணிக வளாகத்தை நிறுவுவதன் மூலம் பணமாக்குகிறது. இதற்கான ரூ.500 கோடி முதலீட்டில் மெகா செயல் திட்டம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த 2022-23ம் நிதியாண்டில் கே.எஸ்.டி.எல். நிறுவனத்தின் நிகர லாபம் 16 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.160 கோடியாகவும், வருவாய் 25 சதவீதம் உயர்ந்து ரூ.1,375 கோடியாகவும் இருந்தது. இந்த ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.2,000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+