வேலைக்கு செல்லக்கூடிய பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலம் ஒன்று பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது . அதில் மாதவிடாய் விடுப்பு கொள்கை 2025க்கு அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்தது. இதன்படி பெண் ஊழியர்கள் அனைவரும் மாதத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பனை எடுத்துக் கொள்ளலாம் . இது அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தில் செயல்படக்கூடிய அனைத்து ஐடி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் என அனைத்திற்குமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஆண்டுக்கு ஆறு நாள் மாதவிடாய் விடுப்பு என்ற வகையில் உழைக்கும் மகளிருக்கு வழங்கலாம் என முடிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. இதனை தொழில்துறையினர் ஆய்வு செய்து மாதத்திற்கு ஒரு நாள் என மாற்றி அரசுக்கு பரிந்துரை செய்திருக்கின்றனர். அரசும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக சித்தராமையா அரசு 18 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவை நியமனம் செய்திருந்தது .அதில் பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பு உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கர்நாடகாவில் ஏற்கனவே ஸ்விக்கி , சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய பெண் டெலிவரி ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பை வழங்குகின்றன.
ஸ்விக்கி மாதத்திற்கு இரண்டு நாளும் சோமேட்டோ ஓராண்டுக்கு பத்து நாளும் என சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகின்றன. இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது. பீகாரில் மாதத்திற்கு இரண்டு நாட்கள் பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
கேரளா அரசும் 2023 ஆம் ஆண்டு கேரளாவின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவிகள் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்தது. ஒடிசா மாநில அரசு மாதத்தில் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது. ஏற்கனவே இந்தோனேசியா ,தென்கொரியா, வியட்நாம் ,பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் முறை அமலில் இருந்து வருகிறது.
கர்நாடகா மாநில அரசின் இந்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே கர்நாடக மாநில அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்கள் இனி ஆண்டுக்கு 12 நாட்கள் கூடுதல் விடுப்பு அதாவது மாதத்திற்கு 1 நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பை பெற உள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications