2009 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் உயர்ந்துள்ளது என ADR அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
இந்த 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துச் சராசரியாக 286 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், இதில் அதிகபட்சமாகப் பாஜக கட்சியைச் சேர்ந்த ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி அவர்களின் சொத்து மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) அறிக்கை வெளியிட்டு உள்ளது.
யார் இந்த ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி..? இவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு..?
ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி
கார்நாடகாவை சேர்ந்த ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி ஜூலை 2016 ஜூலை 5 முதல் 2019 மே 24 வரையிலான காலகட்டத்தில் மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரம் துறை அமைச்சராக இருந்தார். 2001 வரையில் ஜனதா தல் கட்சியில் இருந்தவர், 2002ல் பிஜேபி-யில் சேர்ந்தார்.
சொத்து மதிப்பு
ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி அந்தந்த ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் போட்டிப்போடும் போது சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்கள் மூலம் இந்தத் தகவல்களைத் தொகுத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சி
ரமேஷ் சந்தப்பா ஜிகஜினகி அந்தந்த ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி (பாஜக) சார்பில் போட்டிப்போடும் போது சமர்ப்பித்த பிரமாணப் பத்திரங்கள் மூலம் இந்தத் தகவல்களைத் தொகுத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு (ADR) அமைப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகா
ஏடிஆர்-நேஷனல் எலெக்ஷன் வாட்ச் அறிக்கையின்படி, 2009 மற்றும் 2019 க்கு இடையிலான காலகட்டத்தில் சொத்து மதிப்பில் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்தோர் பட்டியலில் கர்நாடகாவின் மற்றொரு பாஜக கட்சியைச் சேர்ந்த பி.சி. மோகன் டாப் 10 பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பி.சி. மோகன்
2019 ஆம் ஆண்டுப் பெங்களூரு மத்திய தொகுதியில் இருந்து மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.சி. மோகன் , 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக அறிவித்தார். இந்த அளவு 10 ஆண்டுகளில் 75.55 கோடி ரூபாயாக உயர்ந்து 1,306 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
வருண் காந்தி
கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபித் தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கட்சியைச் சேர்ந்த வருண் காந்தியின் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.4.92 கோடியிலிருந்து 2019-ல் ரூ.60.32 கோடியாக உயர்ந்துள்ளது.
ஹர்சிம்ரத் கவுர் பாதல்
பாதிண்டா சிரோமணி அகாலி தல் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்சிம்ரத் கவுர் பாதல்-ன் சொத்து மதிப்பு 2009-ல் ரூ.60.31 கோடியிலிருந்து 2019-ல் ரூ.217.99 கோடியாக உயர்ந்துள்ள. இந்த இடைப்பட்ட காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு 261 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பினாகி மிஸ்ரா
ஒடிசாவின் பூரியில் இருந்து பிஜு ஜனதா தளம் (பிஜேடி) நாடாளுமன்ற உறுப்பினரான பினாகி மிஸ்ரா-வின் சொத்து மதிப்பு 296 சதவீதம் அதிகரித்துள்ளது. 2009ல் 29.69 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு 2019ல் 117.47 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
71 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதேவேளையில் சுயேச்சைகள் உட்பட 71 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு 2009ல் ரூ.6.15 கோடியாக இருந்தது. 2009 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அவர்களின் சொத்துக்களின் சராசரியாக 286 சதவீதம் வளர்ச்சி அடைந்து 17.59 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications