இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், குறிப்பாக கிராமம் மற்றும் சிறு நகரங்களில் பெரும் பணக்காரர்கள், பணக்கார குடும்பங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் வெறும் 1 சதவீதம் தான், அதிலும் ஒரு 1 சதவீத பணக்காரர்களிடம் தான் பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் போன்றவை உள்ளது. பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர் வாங்குவது பெரிய விஷயம் இல்லையென்றாலும் அதை மெயின்டெயின் செய்வது மிகவும் முக்கியம், யானை வாங்கி தீனி போடும் கதை தான்.

இப்படி பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர், 3 ரோல்ஸ் ராய்ஸ் கார் என மக்களை வியக்க வைக்கும் கேரள தொழிலதிபர் யார். முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரிடம் ஒன்றுக்கும் அதிகமான பிரைவேட் ஜெட் இருப்பது அனைவருக்கும் தெரியும் கேரளாவில் பிரைவேட் ஜெட், ஹெலிகாப்டர், 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் பெரும் பணக்காரர் யார்..?
கேரளா குட்டி மாநிலமாக இருந்தாலும், கேரளாவில் இருந்து இந்தியா முழுவதும், உலகின் பல நாடுகளில் வர்த்தகம் செய்யும் தொழிலதிபர்களும், பெரிய நிறுவனங்களின் தலைவர்களும் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் தங்கம் நகை விற்பனையில் பெரும் புரட்சியை கேரளாவில் இருந்து உருவாக்கியவர் தான் டி.எஸ்.கல்யாணராமன்.

டி.எஸ்.கல்யாணராமன் பெயரை கேட்ட உடன் பலருக்கும் இவர் யார் என தெரிந்திருக்கும், இவர் தான் இந்தியா மொத்தத்தையும் கலக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் கட்டுப்பாட்டில் கல்யாண் டெவலப்பர்ஸ் என்ற மற்றொரு நிறுவனமும் உள்ளது.
டி.எஸ்.கல்யாணராமன் தனது 12 வயதில் இருந்து தந்தையுடனான வர்த்தகத்தில் பணியாற்றி, அனைத்து விதமான வர்த்தக நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டார். 1993ல் கல்யாண் ஜுவல்லர்ஸ்-ன் முதல் நகை கடையை கேரளாவில் திறந்தார், இன்று இந்த தங்க நகை சாம்ராஜ்ஜியத்தின் மொத்த மதிப்பு 8407 கோடி ரூபாய்.
டி.எஸ்.கல்யாணராமன் கேரளாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் மீதும் தமிழ்நாட்டு வர்த்தகத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். தற்போது இரு மகன்களும் கல்யாண் குரூப் வர்த்தகத்தை நிர்வாகம் செய்து வருகிறார்கள்.

டி.எஸ்.கல்யாணராமன்-க்கு கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கும் காரணத்தால் இவர் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளார். ஒரு ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் சீரியஸ் 1 கார், 2 ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் சீரியஸ் 2 கார்களை வைத்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் உலக நாடுகளிலும் வர்த்தகம் செய்யும் காரணத்தால் போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சியில் 178 கோடி ரூபாய் மதிப்பிலான Embraer Legacy 650 என பிரைவேட் ஜெட் விமானத்தையும், 48 கோடி ரூபாய் மதிப்பிலான Bell 427 helicopter-ஐ வைத்துள்ளார்.
READ MORE ON KERALA STORIES
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!



Click it and Unblock the Notifications