திருச்சூரில் உள்ள நகைக்கடை ஊழியர்களை தாக்கிய திருடர்கள் சுமார் மூன்று கிலோ தங்கத்தை திருடி தங்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் நடந்துள்ளது. திருச்சூரில் உள்ள டிபி செயின்ஸ் என்ற நிறுவனத்தில் தங்கம் திருடப்பட்டது.
வெள்ளியன்று இரவு, நகைக் கடை ஊழியர்கள் பட்டறையில் இருந்து ரயில் நிலையத்துக்குச் சென்றபோது, வெள்ளை நிற காரில் வந்த ஒரு கும்பல் அவர்களைத் திடீரென தாக்கியது.

அவர்களிடமிருந்து தங்க நகைகளை வைத்துருந்த சூட்கேஸைத் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள உள்ளூர் நகைக்கடைகளுக்கு ஊழியர்கள் மூன்று கிலோ நகைகளை எடுத்துச் சென்று கொண்டிருக்கும்போது இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நகைக்கடை ஊழியர்களான கல்லூரைச் சேர்ந்த ரின்டோ, அரநாட்டுக்கரையைச் சேர்ந்த பிரசாத் ஆகியோர் கொண்டு சென்ற சூட்கேஸை காரில் வந்த கொள்ளைக் கும்பல் பறித்துச் சென்றது. ஊழியர்கள் இருவரும் அளித்த வாக்குமூலத்தில் வெள்ளை நிற டிசையர் காரில் வந்த கும்பல் நகைகளை திருடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாரம் ஒருமுறை சென்னையில் இருந்து எழும்பூருக்கு ரயில் மூலம் நகைகள் கொண்டு செல்லப்படும். இந்தத் தகவல் கொள்ளை சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தெரியும் என்ற முடிவுக்கு அதிகாரிகள் வந்துள்ளனர். திருச்சூர் கிழக்கு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
திருச்சூர் ரயில் நிலையத்துக்கும் நகைப்பட்டறைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 500 மீட்டர். கொள்ளையர்கள் நகை கடை ஊழியர்களின் நடமாட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்திருக்கலாம். அவர்கள் புறப்படும் நேரத்தை அறிந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலிசார் ஊழியர்களை விசாரிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்துள்ள போலீஸார் கொள்ளை நடந்த இடத்திலிருந்து சென்ற போன் அழைப்பு பதிவுகளைக் கேட்டு வருகின்றனர்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications