இந்தியாவில் விற்பனை பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வந்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் பழைய மறைமுக வரி விதிப்பையே மத்திய மாநில அரசுகள் தொடர்கிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால் மக்களுக்குப் பெரும் சுமையாக மாறிய நிலையில் சாமானிய மக்கள் எரிபொருள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியை நீக்கிவிட்டு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு எதிராகப் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதற்குத் தலைமை நீதிபதி எஸ் மணிகுமார் தலைமையிலான பென்ச் ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி கவுன்சிலை ஏன் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை அடுத்த 10 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்ட போது அனைத்து மாநிலமும் வருவாய் அளவீடு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மறுப்புத் தெரிவித்தது. இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் வாக்கு எண்ணிக்கையில் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் இருந்தாலும், இதன் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் மத்திய மாநில அரசுகள் அதிக வரி வருமானம் ஈட்டும் விதமாகப் பழையபடி மறைமுக வரி விதிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கைகளுக்கு
இதேபோல் ஜிஎஸ்டி வரி வந்த பின்பு வரி வசூல் அனைத்தும் மொத்தமாக மத்திய அரசு கைகளுக்குச் செல்லும் காரணத்தால் மாநில அரசுக்கான ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. மேலும் வரி வருமான பங்கீடும் குறைந்த காரணத்தால் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் உடன் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
மாநில அரசு நிலை
இந்தச் சூழ்நிலையில் மாநில அரசுக்கு வரி ஆதாயம் கிடைக்கும் ஒரு சில பொருட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் இருக்கும் காரணத்தால் இதை விட்டுக்கொடுக்க மறுக்கிறது மாநில அரசுகள்.
வரி பங்கீடு
இதற்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது அதிக வருவாய் அளிக்கும் மாநிலத்திற்குக் குறைவான வரி பங்கீடு அளிப்பது தான். வரி வருமானத்திற்கு ஏற்றவாறு ஜிஎஸ்டி வரியை பிரித்துக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்களை எவ்விதமான பிரச்சனையுமின்றி ஜிஎஸ்டி வரி விதிக்க முடியும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications