கேரளாவைச் சேர்ந்த முன்னணி நகைக்கடைகளான மலபார் கோல்டு & டயமண்ட்ஸ், ஜோயாலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகியவை வங்கிக் கட்டணத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியான தங்க விலையை வழங்க முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள தங்க சங்கங்கள் நிர்ணயிக்கும் விலையைப் பொறுத்து மாநிலத்துக்கு மாநிலம் தங்கத்தின் விலை மாறுபடும்.
ஆனால் தற்போது ஒரே மாநிலங்களில் பெரும்பாலான நகைக்கடைக்காரர்கள் வெவ்வேறு தங்க விலைகளை நிர்ணயம் செய்து தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
துபாய்
துபாய் போன்ற அரபு நாடுகளில் பெரும்பாலான இடத்தில் அனைத்து நகைக் கடைகளிலும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் தங்க வர்த்தகம் அமைப்புகள் நிர்ணயம் செய்யும் விலையில் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
கேரளா
கிட்டத்தட்ட இதே கட்டமைப்பைக் கேரளாவில் அம்மாநிலத்தின் நகை கடைக்காரர்கள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஒருபக்கம் தங்கத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் மத்திய அரசின் ஹால்மார்க் விதிமுறை இருக்கும் நிலையில், தற்போது விலையும் சமன்படுத்தும் நிலையில் சிறிய நகைக் கடைக்காரர்களுக்குப் புதிய வர்த்தகத்தைப் பெறுவது கடினமாகிவிடும்.
ஜோயாலுக்காஸ்
இந்த நிலையில் நாட்டில் உள்ள அனைத்து நகை கடை ஷோரூம்களிலும் ஒரே மாதிரியான தங்க விலையை நாங்கள் தங்க நகைகளை விற்பனை செய்ய உள்ளோம் என்று ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் தெரிவித்தார்.
தங்கம் விலை
கேரள மாநிலத்தில் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் அனைத்து கேரள தங்கம் மற்றும் வெள்ளி வணிகர் சங்கங்களுடன் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஒரே மாதிரியான தங்க விலையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன்
இந்தியா புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கேரள தங்கம் மற்றும் வெள்ளி வணிகர் சங்கங்களின் முடிவுகள் குறித்துப் பேசுகையில், நாட்டிலேயே ஒரே மாதிரியான தங்க விலையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாகக் கேரளா மாறியுள்ளது எனத் தெரிவித்தார்.
தங்கம் நுகர்வு
நாட்டிலேயே தங்கம் நுகர்வில் முதலிடம் வகிக்கும் மாநிலமாகக் கேரளா இருப்பதால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான தங்க விலையை நிர்ணயம் செய்யும் களத்தைக் கேரளா அமைக்க முடியும் என்று மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது கூறினார்.
வங்கி வட்டி விகிதம்
வங்கி வட்டி விகிதத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் தங்கத்தின் விலை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் வங்கி விகிதத்தை விட, தங்கத்தின் விலை கிராமுக்கு ₹150-300 கூடுதலாக உள்ளது. இது மக்களுக்குப் பெரும் சுமையாகவும், விற்பனையாளர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுக்க உள்ளது.
வெளிப்படைதன்மை
கேரளாவில் ஒரே நாளில் தங்கம் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கி விகிதத்தின் அடிப்படையில் விற்கப்பட்டால் ஒரே மாதிரியான தங்கத்தின் விலை நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவது மூலம் வெளிப்படைத்தன்மையுடன் வர்த்தகம் செய்ய முடியும்.
MCX சந்தை விலை
MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.46 சதவீதம் அதிகரித்து 52,986.00 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 0.71 சதவீதம் அதிகரித்து 62,030.00 ரூபாயாக உள்ளது. மத்திய அரசு தங்க இறக்குமதியைக் குறைக்க அதிகப்படியான வரியை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications