ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றிருக்கிறது. இதன் மூலம் மத்தியில் NDA கூட்டணி ஆட்சி அமைப்பதில் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உள்ளார்.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவர் குடும்பத்திற்குத் தொடர்புடைய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் மற்றும் அமர ராஜா எனர்ஜியின் பங்குகள் கடந்த 5 நாட்களில் 46% வரை உயர்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியை பெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடு தொடர்புடைய நிறுவனப் பங்குகள் இன்று அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதற்கிடையில், வியாழக்கிழமை வர்த்தகத்தில், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் 10% உயர்ந்து ரூ. 601 ஆகவும், அமர ராஜா 9% உயர்ந்து ரூ. 1,325 ஆகவும் இருந்தது. கடந்த 5 நாட்களில் அமர ராஜா பங்குகள் 4.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
அமர ராஜா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜெய் தேவ் கல்லா, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ப்ரோமேட்டராக உள்ளார். இதன் வாயிலாகவே தெலுங்கு தேசம் கட்சியின் வெற்று இவ்விரு நிறுவனப் பங்குகளும் உயர முக்கிய காரணமாக உள்ளது.
ஹெரிடேஜ் ஃபுட்ஸின் பங்குதாரர் விபரங்கள் படி, மார்ச் 31, 2024 முடிவில் என்.சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஷ்வரி 2,26,11,525 பங்குகள் அதாவது 24.37% பங்குகளையும், அவரது மகன் நாரா லோகேஷ் சுமார் 1,00,37,453 ஈக்விட்டி பங்குகள் அதாவது 10.82% பங்குகளையும் வைத்துள்ளனர்,
ஹெரிடேஜில் 5.59% பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு ப்ரோமோட்டர் நிறுவனமான மெகாபிட் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், இதன் இயக்குநர்களாக சந்திரபாபு நாயுடு மனைவியும் மகனும் உள்ளனர். இதன் மூலம் நிறுவனத்தில் நாரா புவனேஷ்வரி மற்றும் நாரா லோகேஷ் ஆகியோர் இணைந்து சுமார் 41% பங்குகளை வைத்துள்ளனர்.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் 1992 ஆம் ஆண்டில் நாரா சந்திரபாபு நாயுடுவால் நிறுவப்பட்டது, இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனத்தில் இரண்டு வணிகப் பிரிவுகள் - பால் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி.
இதை தொடர்ந்து அமர ராஜா எனர்ஜி மற்றும் மொபிலிட்டி நிறுவனம் பல்வேறு வகையான சேவைகளையும், தயாரிப்புகளையும் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கியமான சேவைகளில் எனர்ஜி ஸ்டோரேஜ் சேவை, லித்தியம்-அயன் செல் உற்பத்தி, EV சார்ஜர்கள், Li-ion பேட்டரி பேக் அசெம்பிளி, வாகன மற்றும் தொழில்துறைக்குத் தேவையான லூப்ரிகண்டுகள் என பல சேவைகளை வழங்கி வருகிறது.
அமர ராஜா எனர்ஜி மற்றும் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய எனர்ஜி ஸ்டோரேஜ் சேவை அளிக்கும் நிறுவனமாகும். இது இந்தியாவின் முன்னணி ஆட்டோமோட்டிவ் பேட்டரி பிராண்டுகளான அமரோன் மற்றும் பவர்ஜோன் போன்ற பிராண்டுகளை கொண்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications