அமேசான் நிறுவனம் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் நிறுவனங்கள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தத்திற்குத் தடை உத்தரவைச் சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாயத்தில் பெற்ற நிலையில் 3.4 பில்லியன் டாலர் அளவிலான ஒப்பந்தம் தடை பெற்றது.
இந்தத் தடை உத்தரவு இந்தியாவில் செல்லாது எனப் பியூச்சர் குரூப் வழக்கு தொடுத்த நிலையில் உயர் நீதிமன்றம் சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பாய அமைப்பின் உத்தரவை இந்தியாவில் ஏற்க சட்டம் அனுமதி உள்ளது. இதனால் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தம் தடை பெற்றது.
மேலும் இந்த உத்தரவை எதிர்த்துக் கீழ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்தச் சூழ்நிலையில் கிஷோர் பியானி தலைமையிலான பியூச்சர் குரூப் சனிக்கிழமை புதிதாக ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது.
சுமார் 6000 பக்கம் கொண்ட இந்த அறிக்கையில் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை எனில் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனப் பியூச்சர் குரூப் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் கிஷோர் பியானி-யின் பியூச்சர் குரூப் சார்பில் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் சுமார் 35,575 ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். இதுமட்டும் அல்லாமல் இந்திய வங்கிகள் மற்றும் பத்திரங்கள் வாயிலாகப் பெற்ற 3.81 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பி அளிக்க முடியாத நிலை உருவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் இந்தக் கோரிக்கையே ஏற்றுத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு கொடுத்துள்ளது. ஆனால் இந்த மனு மூலம் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படாது எனக் கணிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் மத்தியிலான வர்த்தகம் கிட்டதட்ட தோல்வி அடைந்துவிட்டதாகக் கருதப்படும் நிலையில், 2.69 பில்லியன் டாலர் அளவிலான கடனில் தவிக்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தைக் கைப்பற்ற அமேசான் திட்டமிட்டு வருவதாகத் தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்தத் தகவல் மூலம் பியூச்சர் குரூப் நிறுவனப் பங்குகள் இன்று 17 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஆனால் தற்போது பியூச்சர் குரூப் தாக்கல் செய்துள்ள புதிய மனுவின் மூலம் அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தத்தில் எவ்விதமான சாதகமான வாய்ப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications