பல லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்தாலும் சிலருக்கு அந்த வேலையில் திருப்தி இருக்காது. அதனால் வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். அது போன்ற ஒரு நபர்தான் 27 வயதான கிராதி அகர்வால்.
இன்போசிஸ் வேலையை உதறிவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி 3 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் ஈட்டியுள்ளார். உத்தர பிரதேசம் ஆக்ராவை சேர்ந்தவர் கிராதி அகர்வால். இவர் ஐ.ஐ.டி. தன்பாத்தில் பட்டம் பெற்றவர். படிப்பு முடிந்தவுடன் நாட்டின் முன்னணி ஐ.டி. சேவை நிறுவனமான இன்போசிஸில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றினார்.

நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தாலும், அந்த வேலையில் அவருக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம்தான் அவரே ஆக்கிரமித்து இருந்தது. ஆன்லைன் மார்க்கெட்டிங் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதை அகர்வால் பார்த்தார்.
இது அவருக்கு முற்றிலும் புதியதாக இருந்தாலும் கூட அந்த துறையில் இறங்க முடிவு செய்தார். இதனையடுத்து இன்போசிஸ் வேலையை ராஜினாமா செய்தார். பின்பு ஆன்லைனில் கன்டென்ட் போஸ்ட் செய்து சோதனை செய்யவும் தொடங்கினார். மேலும், Coursera மற்றும் Udemy ஆகியவற்றில் ஆன்லைன் மார்க்கெட்டிங் தொடர்பான முறையான படிப்புகளை படித்தார்.
ஃப்ரீலான்ஸராக தொடங்கி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் நுழைந்தார். 2022 மார்ச் மாதத்தில் தனது சொந்த நிறுவனமான மார்க்ரேட்டிங் கபேவை (Markrating Café) தொடங்கினார். மார்க்ரேட்டிங் கபேவை தொடங்கிய போது சில தடைகளை சந்தித்தார்.
திறமையான அணியை ஒன்று சேர்ப்பது, வர்த்தகத்தை விரிவுப்படுத்துவது போன்ற சவால்களை சந்தித்தார். இருப்பினும் அவற்றை சமாளித்து தனது வர்த்தகத்தை வளர்ச்சி அடைய செய்தார். இவரது நிறுவனம் இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் மற்றும் இலக்கு விளம்பரங்கள் உட்பட விரிவான சமூக ஊடக நிர்வாகத்தை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது.
2023 நிதியாண்டில் ரூ.12 லட்சம் வருவாய் கிராதி அகர்வால் ஈட்டியுள்ளார். தனது வணிக புத்திசாலித்தனமும் அர்ப்பணிப்பும் காரணமாக ஸ்டார்ட்அப் தொடங்கியதில் இருந்து சுமார் ரூ.40 முதல் 50 லட்சம் வரை அவர் சம்பாதித்துள்ளார்.
லிங்க்ட்னில் 1 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸை வைத்துள்ளார். மேலும் தொடர்ந்து பதிவுகள் போடுகிறார். சிறந்த சமூக ஊடக குரல் என்ற புகழ்பெற்ற பேட்ஜையும் பெற்றுள்ளார். இவரது நிறுவனம் 100 சதவீதம் தொலைவில் (அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுவது கிடையாது) இருந்து செயல்படுகிறது.
கிராதி அகர்வால் தான் கற்ற அனுபவத்தில், மார்க்கெட்டிங் என்பது ஒவ்வொரு வணிகத்துக்கும் சுத்தமான காற்று போன்றது, வாழவும் செழிக்கவும் உங்களுக்கு இது தேவை. மார்க்கெட்டிங் செலவுகளை குறைப்பது யாருக்கும் உதவாது. லாபம் தரும் தொழிலுக்கு பொறுமையே முக்கியம் என்று சொல்கிறார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications