வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏற்கனவே வங்கியில் தேவையான உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து இருந்து, தங்கள் முகவரியில் எவ்விதமான மாற்றமும் இல்லாத பட்சத்தில் KYC விவரங்களைப் புதுப்பிக்க இனி தங்களின் வங்கிக் கிளைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக, KYC தகவலில் எந்த மாற்றமும் இல்லை எனில் ஒவ்வொரு வங்கி வாடிக்கையாளரும் தங்களுடைய self-declaration மின்னஞ்சல், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம்கள் அல்லது வேறு ஏதேனும் டிஜிட்டல் சேனல்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்.
கேஒய்சி அப்டேஷனுக்காக வங்கி நிர்வாகங்கள் இனி வங்கி கிளை வர வேண்டும் என வங்கி வாடிக்கையாளர்களை வலியுறுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி KYC தகவலில் எந்த மாற்றமும் இல்லை என்றால், மறு-KYC செயல்முறையை முடிக்க ஒரு வாடிக்கையாளரின்self-declaration போதுமானது என அறிவித்துள்ளது.
self-declaration செயல்முறை
இந்த self-declaration செயல்முறையில் டிஜிட்டல் முறையில் செய்ய வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஏடிஎம்கள், டிஜிட்டல் சேனல்கள் அதாவது ஆன்லைன் வங்கி சேவை, இன்டர்நெட் வங்கி சேவை போன்றவற்றில் தெரிவிக்கும் வசதியை வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கிளைகள்
இந்த கட்டமைப்பு வங்கிகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வங்கிக்கு நேரில் சென்று வங்கி அதிகாரிகளிடம் கடிதம், விண்ணப்பம் போன்றவற்றை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
முகவரியில் மாற்றம்
இதேவேளையில் வங்கி வாடிக்கையாளரின் முகவரியில் மாற்றம் இருந்தால், வாடிக்கையாளர்கள் திருத்தப்பட்ட / புதுப்பிக்கப்பட்ட முகவரியை இந்த டிஜிட்டல் சேனல்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் வழங்கலாம். அதன் பிறகு, இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்கப்பட்ட முகவரியை வங்கி சரிபார்க்கும் என ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டம்
பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (பிஎம்எல்ஏ) க்கு இணங்க அவ்வப்போது மதிப்பாய்வுகள் மற்றும் புதுப்பிப்புகளை மேற்கொள்வதன் மூலம் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரின் தரவுகளை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது வங்கிகளுக்கு ஆர்பிஐ கொடுத்த முக்கிய உத்தரவாக உள்ளது.
ஆவணங்கள் காலாவதி
வங்கிப் பதிவேடுகளில் உள்ள KYC ஆவணங்கள் தற்போதைய அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களின் பட்டியலுக்கு இணங்கவில்லை என்றால், ஒரு புதிய KYC செயல்முறை தேவைப்படுகிறது. முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட KYC ஆவணங்களின் காலாவதி ஆனால் புதிய kyc தேவைப்படுகிறது.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications