ஆர்பிஐ கட்டுப்பாட்டில் சிக்கிய முதல் வங்கி.. LVB அல்ல.. பெரிய லிஸ்ட்டே இருக்கு பாஸ்!

மத்திய நிதியமைச்சகம் நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு நவம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதித்த அடுத்த சில மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி LVB வங்கியைக் காப்பாற்ற DBS வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்து மக்களைப் பயத்தில் இருந்து மீட்டுள்ளது.

Recommended Video

1000 ருபாய் கூட எடுக்க முடியல | LAKSHMI VILAS BANK | PUBLIC OPINION | ONEINIDA TAMIL

ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 20 வருடத்தில் சுமார் 10 வங்கிகள் மீது நிதியமைச்சகம் moratorium கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இது போகட்டும் இதுவரை இந்தியாவில் எத்தனை தனியார் வங்கிகள் மூடப்பட்டுள்ளது தெரியுமா..? வாங்கப் பார்ப்போம்

லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்தது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது உண்மை தான். இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி என்பதாலும், இவ்வங்கிக்குத் தென் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் இருக்கும் காரணத்தினாலும் மக்கள் மத்தியில் அதிகளவிலான பதற்றம் நிலவியது.

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்

இந்தியாவில் 1947 முதல் 1969 வரையிலான காலகட்டத்தில் சுமார் 559 தனியார் வங்கிகள் மூடப்பட்டு உள்ளது. இதன் பின்பு 1970 முதல் இன்று வரையில் சுமார் 36 தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகமும் இணைந்து moratorium கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது.

இதில் பல வங்கிகள் வலிமையான பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 சிக்கிம் பேங்க் லிமிடெட்

சிக்கிம் பேங்க் லிமிடெட்

1999ஆம் ஆண்டுச் சிங்கிம் பேங்க் லிமிடெட் மீது மார்ச் 8 முதல் ஜூன் 5 வரையில் ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகமும் இணைந்து moratorium கட்டுப்பாடுகளை விதித்து.

பரேலி கார்ப்ரேஷன் பேங்க் லிமிடெட்

பரேலி கார்ப்ரேஷன் பேங்க் லிமிடெட்

சிக்கிம் பேங்க் லிமிடெட் மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்த அதே நாளில் பரேலி கார்ப்ரேஷன் பேங்க் லிமிடெட் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முதல் ஜூன் 5 வரை விதிக்கப்பட்ட தடை காலம் மார்ச் 3, 2000 வரையில் நீட்டிக்கப்பட்டது

 பரேலி கார்ப்ரேஷன் பேங்க் லிமிடெட்

பரேலி கார்ப்ரேஷன் பேங்க் லிமிடெட்

சிங்கிம் பேங்க் லிமிடெட் மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்த அதே நாளில் பரேலி கார்ப்ரேஷன் பேங்க் லிமிடெட் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. முதல் ஜூன் 5 வரை விதிக்கப்பட்ட தடை காலம் மார்ச் 3, 2000 வரையில் நீட்டிக்கப்பட்டது.

பனாரஸ் ஸ்டேட் பேங்க் லிமிடெட்

பனாரஸ் ஸ்டேட் பேங்க் லிமிடெட்

2002ஆம் ஆண்டில் பனாரஸ் ஸ்டேட் பேங்க் லிமிடெட் மீது ஜனவரி 22 முதல் ஏப்ரல் 21 வரையிலான காலகட்டத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

நெடுங்காடி வங்கி

நெடுங்காடி வங்கி

இவ்வங்கி 1899ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட வங்கியாகிலும், 1913 முதல் பதிவு செய்யப்பட்டுத் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் தனியார் வங்கியாகவும் திகழ்ந்தது.

2002ஆம் ஆண்டு வங்கியில் செய்யப்பட்ட மோசடி காரணமாக நெடுங்காடி வங்கி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 2003ல் பஞ்சாம் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டது.

 

 பிற வங்கிகள்

பிற வங்கிகள்

இதேபோல் தென் குஜராத் லோக்கல் ஏரியா வங்கி லிமிடெட் (2003), குளோபல் டிரஸ்ட் வங்கி மீது (2004) கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒரியென்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியுடன் இணைக்கப்பட்டது.

இதன் பின்பு கணேஷ் பேங்க் ஆப் குருந்த்வாட் (2006), யுனைடெட் வெஸ்டர்ன் பேங்க் லிமிடெட் (2006), பிஎம்சி வங்கி மீது 2019ஆம் ஆண்டும், யெஸ் வங்கி மீது மார்ச் 5, 2020லும், தற்போது லட்சுமி விலாஸ் வங்கியிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+