தனி மரம் தோப்பாகாது, நண்பர்கள் இல்லை என்றால் வாழ்க்கை முழுமை அடையாது என்ற பலர் சொல்லி கேட்டு இருப்போம். ரத்த உறவுகளை தவிர்த்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவுபவர்கள் நண்பர்கள் மட்டுமே.
இன்று பல நண்பர்கள் இணைந்து பெரிய தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அதற்கு உதாரணமாக, ஆன்லைன் முதலீட்டு தளமான க்ரோவ் நிறுவனத்தின் நிறுவனர்கள் லலித் கேஷ்ரே, ஹர்ஷ் ஜெயின், நீரஷ் ஜெயின் மற்றும் இஷான் பன்சால் ஆகியோர் சிறந்த உதாரணம்.

க்ரோவ் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன், ஹர்ஷ் ஜெயின், நீரஷ் ஜெயின் மற்றும் இஷான் பன்சால் ஆகியோர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இவர்களில் ஐ.ஐ.டி. பட்டதாரியான ஹர்ஷ் ஜெயின் முதலில் கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கி பின் மூடி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் அனைவரும் பிளிப்கார்டில் நல்ல பணியில் இருந்தனர். இருந்தாலும் சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க வேண்டும் என்று நண்பர்கள் விரும்பினர். இதனையடுத்து எந்த துறையில் வர்த்தக வாய்ப்பு உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, நாட்டில் நிதி திட்டங்களை வாங்குவதில் மந்தமான, சிக்கலான மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
மேலும், இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமான முதலீட்டு வருமானத்தை கொண்ட மக்கள் உள்ள போதிலும், அதில் 3 சதவீதத்துக்கும் குறைவான மக்களை பங்குகளில் முதலீடு செய்கின்றனர். க்ரோவ் நிறுவனர்கள் இந்த கவலையை நல்ல வாய்ப்பாக மாற்றுவதற்கான திறனை கண்டனர்.
நுகர்வோரின் தயக்கமான அணுகுமுறை போன்ற சவால்களை முறியடித்து, நிதி திட்டங்களை எளிதாக வாங்குவதற்கான செயல்முறையை ஒழுங்கமைப்பதை ஹர்ஷ் ஜெயினும் அவர்களது நண்பர்களும் நோக்கமாக கொண்டிருந்தனர். இதனையடுத்து ஹர்ஷ் ஜெயினும் அவரது நண்பர்களும் இணைந்து க்ரோவ் தளத்தை ஆரம்பித்தனர்.
2017ல் முதலில் அவர்கள் நேரடி மியூச்சுவல் பண்டு விநியோக தளமாம க்ரோவை தொடங்கினர். ஆரம்பத்தில் மியூச்சுவல் பண்டு திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திய க்ரோவ் குழு, பின்பு பங்குகள், ஐ.பி.ஓ.கள், இ.டி.எஃப்., தங்கம், என்.எஃப்.ஓ., ப்யூஷர் அண்ட் ஆப்சன், பிக்சட் டெபாசிட் மற்றும் அமெரிக்க பங்குகள் உள்பட தனது வழங்கலை விரைவாக விரிவுப்படுத்தியது.
க்ரோவ் தளத்தின் வடிவமைப்பு, எளிமை,வேகம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாக உள்ளது. நேரடி பரஸ்பர நிதிகளில் ஜீரோ கமிஷன் முதலீடு, பங்கு முதலீடுகளுக்கான குறைந்த தரகுக் கட்டணங்கள் உள்ளிட்டவை க்ரோவின் தனித்துவமான அணுகுமுறையாகும். போர்ப்ஸ் அறிக்கைபடி, கடந்த 2022-23ம் நிதியாண்டில் க்ரோவ் நிறுவனம் ரூ.448.7 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும் ரூ.1,294 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
என்.எஸ்.இ. தரவுகளின்படி, க்ரோவில் 66.3 லட்சம் வாடிக்கையாளர்கள் செயல்பாட்டில் உள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் உள்ள பங்கு தரகு தளங்களில் அதிக பயனர்களை கொண்ட தளமாக உருவெடுத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, போட்டி நிறுவனமான Zerodhaவில் 64.8 லட்சம் பயனர்கள் இருந்தனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications