நாட்டின் முன்னணி தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரர்களில் ஒருவர் லலித் மோடி. லலித் மோடியின் பெரிய கூட்டு நிறுவனமான மோடி என்டர்பிரைசஸின் சொத்து மதிப்பு ரூ.23,450 கோடியாகும். லலித் மோடியின் சொத்து மதிப்பு ரூ.4,555 கோடி.
இவர் சிறந்த தொழிலதிபர் என்றாலும் அவரை பட்டி தொட்டி எங்கும் தெரிய செய்தது ஐ.பி.எல். கிரிக்கெட் தான். ஐ.பி.எல். 20-20 கிரிக்கெட் தொடரின் மூளையாக இருந்தவர். இருப்பினும் லலித் மோடி மீது அடுக்அடுக்கான புகார்கள் மற்றும் பண மோசடி உள்ளிட்ட பல குற்றங்களில் இவர் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து இதற்கு மேல் இங்கு இருந்தால் கைது செய்யப்படலாம் என்ற பயந்து இங்கிலாந்துக்கு சென்றார். தற்போது அவர் லண்டனில் வசித்து வருகிறார். அதேசமயம், அவரது மகள் அலியா மோடியும் தனது தந்தையை போல் பெரிய வர்த்தகத்தை நடத்தி வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது.
லலித் மோடிக்கும் அவரது மறைந்த மனைவி மினல் மோடிக்கும் அலியா மோடி மற்றும் ருசிர் மோடி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். லலித் மோடி குடும்பத்தின் வாரிசாக அவரது மகன் ருசிர் மோடியை பலருக்கும் தெரிந்திருக்கும். லலித் மோடியின் மகன் ருசிர் மோடி, காட்ஃப்ரே பிலிப்ஸ் லிமிடெட், மோடி என்டர்பிரைசஸ், கே.கே. மோடி குழுமம் மற்றும் மோடி கேர் ஆகியவற்றின் இயக்குனராக உள்ளார். ஆனால் லலித் மோடியின் மகளும், ருசிர் மோடியின் அக்காவுமான அலியா மோடி தனியாக ஒரு வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படும் விஷயம் பலருக்கும் தெரியாது.
அலியா மோடி பாஸ்டன் மற்றும் லண்டனில் தனது படிப்பை முடித்தார். அதன் பிறகு லண்டனில் இன்டீரியர் டிசைன் மற்றும் ஆலோசனை வழங்கும் ஏ.எம்.ஆர்.எம். கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இன்டீரியர் டிசைன் ஆலோசகராகவும் உள்ளார்.
ஏ.எம்.ஆர்.எம். கன்சல்டன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மதிப்பு சுமார் ரூ.8.3 கோடியாகும். பல ஆயிரம் கோடிக்கு வாரிசாக இருந்தாலும் நாமும் தனியாக சாதிக்க வேண்டும் என்று தனக்கென சொந்தமாக ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பாதையில் அலியா மோடி பயணம் செய்து கொண்டு இருக்கிறார். அலியா மோடிக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. இத்தாலியின் வெனிஸில் அலியா மோடி தனது கணவர் பிரட் கார்ல்சனை திருமணம் செய்தார். லலித் மோடியின் நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.41 கோடியாகும். இது தவிர்த்து லலித் மோடியின் ரூ.23 ஆயிரம் கோடி வணிக சாம்ராஜ்யத்தின் வாரிசுகளில் ஒருவர் அலியா மோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications