தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக இருக்கக்கூடிய லலிதா ஜுவல்லரி கூடிய விரைவில் ஐபிஓ வெளியீடு செய்ய இருக்கிறது. ஐபிஓ மூலம் 1700 கோடி ரூபாயை திரட்ட இருப்பதாக லலிதா ஜுவல்லரி நிறுவனம் அறிவித்திருக்கிறது .
ஐபிஓ வெளியீடு: பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் லலிதா ஜுவல்லரி சார்பாக தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் புதிதாக பங்குகளை வெளியீடு செய்த 1200 கோடி திரட்ட இருப்பதாகவும் ஏற்கனவே இருக்கும் பங்குகளை விற்பனை செய்து 500 கோடி ரூபாயை திரட்ட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது. இவ்வாறு திரட்டப்படும் 1700 கோடி ரூபாயில் 1000 கோடி ரூபாயை கொண்டு கூடுதலாக தங்களுடைய நகைக்கடைகளை திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

நகை விற்பனையில் லாபம்: உலகிலேயே இரண்டாவது பெரிய நகை விற்பனை சந்தையாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் தேவைப்படும் தங்கத்தில் 70 சதவீதம் நகைகளாக தான் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே நகைக்கடைகளின் வருமானமும் குறைய போவதில்லை. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நகை கடைகள் எல்லாமே முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டி தான் தந்துள்ளன. அந்த வகையில் லலிதா ஜுவல்லரி ஐபிஓ மீது மக்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
வருமானம் அதிகரிப்பு: இந்தியாவில் விற்பனை செய்யக்கூடிய நகைகளில் 40 சதவீதம் தென்னிந்தியாவில் தான் விற்பனை ஆகிறது. லலிதா ஜுவல்லரியும் தென்னிந்தியாவில் தான் தன்னுடைய கடைகளை பெரும்பாலும் நிறுவி இருக்கிறது. எனவே இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றே வைத்து கொள்ளலாம். 2017ஆம் ஆண்டில் 6,083 கோடி ரூபாயாக இருந்த லலிதா ஜுவல்லரியின் வருமானம் 2024 ஆம் நிதி ஆண்டில் 16,788 கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது.
கடன் குறைவு: 2025ஆம் நிதியாண்டின் முதல் 9 மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருமானம் 12,595 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. பெரிய அளவில் கடன் வாங்காமல் செயல்பட்டு வரக்கூடிய ஒரு நிறுவனமாக இது இருக்கிறது. ஏப்ரல் மாத நிலவரப்படி இந்நிறுவனம் 1000 கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிறது. லலிதா ஜுவல்லரி குறைந்த அளவு செய்கூலி சேதாரம் விதிக்கப்படுவதாக விளம்பரம் செய்கிறது .
மிடில் கிளாஸ் மக்களே இலக்கு: லலிதா ஜுவல்லரியின் இலக்கு குறைந்த விலைக்கு நகை வாங்க வேண்டும் என எண்ணக்கூடிய மிடில் கிளாஸ் மக்கள் தான். இந்த நிறுவனம் பெருநகரங்களில் மட்டும் இல்லாமல் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் தொடர்ந்து கடைகளை விரிவாக்கம் செய்து வருகிறது. எனவே வரும்நாட்களில் இதன் விற்பனை அளவும் வருமானமும் அதிகரிக்கும் என்றே நம்பலாம்.
லாபம் 2% தான்: இருந்தாலும் லலிதா ஜுவல்லரியின் லாபம் அனைத்து வரிகளும் செலுத்திய பிறகு வெறும் இரண்டு சதவீதமாக மட்டுமே இருக்கிறது. ஆனால் செயல்படக்கூடிய கல்யாண் ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நகை கடைகள் 7% வரை லாபம் ஈட்டுகின்றன. லலிதா ஜுவல்லரியை பொறுத்தவரை அதன் புரமோட்டர்கள் , செயல்பாடுகள் குறித்த சில விவரங்களை நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது நம்பகத்தன்மையை குறைப்பதாக மிண்ட் தளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது. இது தவிர இந்நிறுவனம் மீது வரி தொடர்பான சில வழக்குகள் இருப்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!



Click it and Unblock the Notifications