சென்னை: ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன. ஜூன் 14, 2024 வரை உங்கள் ஆதார் அட்டை விவரங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்கலாம். இது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) மூலம் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவாகும். இந்த தேதிக்குப் பிறகு, ஆதார் அட்டையில் எந்த விவரங்களை ஆன்லைனில் புதுப்பித்தாலும் கட்டணம் விதிக்கப்படும்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, மின்னஞ்சல் போன்ற தகவல்களை இணையதளம் வழியாக இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சேவை ஜூன் 14, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும். இதற்குப் பிறகு, ஆதார் தகவல்களை இணையதளம் வழியாக புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் தகவல்களை எளிதாகவும் வசதியாகவும் புதுப்பித்துக் கொள்ள இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஆதார் அட்டையை வைத்திருப்பவர்கள், தங்களின் தகவல்களை கண்டிப்பாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, ஆதார் சேவை மையங்களில் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இணையதளம் வழியாக நீங்கள் இலவசமாகவே இந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து உங்கள் தகவல்களை புதுப்பிக்க முடியும். இது மிகவும் விரைவான மற்றும் எளிமையான செயல்முறையாகும். ஜூன் 14 வரை மட்டுமே ஆதார் தகவல்களை இலவசமாக புதுப்பித்துக் கொள்ள முடியும். அதற்குப் பிறகு நீங்கள் திருத்தம் செய்யும் எந்த ஒரு செயல்முறைக்கும் ரூ. 50 கட்டணம் செலுத்த வேண்டும்.
myAadhaar இணையதளம் வழியாக ஆதார் தகவல்களை எவ்வாறு புதுப்பிப்பது?
ஸ்டெப் 1: UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: பின்னர் 'Document Update' என்ற பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: உங்கள் ஆதார் நம்பர், கேப்ட்சா கோடு (Captcha Code) ஆகியவற்றை என்டர் செய்து லாகின் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
ஸ்டெப் 5: புதுப்பிக்க வேண்டிய தகவலை (பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண், மின்னஞ்சல்) தேர்ந்தெடுத்து, தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட டாக்குமெண்ட்களைப் பதிவேற்றவும்.
ஸ்டெப் 6: உங்கள் விவரங்களை மீண்டும் சரிபார்த்து, 'Submit' என்பதை கிளிக் செய்து உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
தேவைப்படும் ஆவணங்கள்: ரேஷன் கார்டு, ஓட்டர் ஐடி, பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், மார்க் சீட், எலக்ட்ரிசிட்டி பில், வாட்டர் பில், கேஸ் பில், பேங்க் பாஸ்புக் போன்ற ஆவணங்கள் இதற்கு தேவைப்படலாம்.
ஆன்லைன் மட்டுமின்றி ஆஃப்லைனிலும், நீங்கள் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க முடியும் அதற்கு அருகில் உள்ள ஆதார் பதிவு மையங்களைப் பார்வையிடலாம். தற்போது இதற்கு எந்த கட்டணமும் இல்லை. ஆனால், ஜூன் 14, 2024 க்குப் பிறகு, இணையதளம் வழியாக புதுப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications