Layoff: விடாது கருப்பு.. 2023ல் தொடரும் பணிநீக்கம்.. அச்சத்தில் மக்கள்..!

2022 ஆம் ஆண்டில் ஒருபக்கம் உலக நாடுகளைப் பணவீக்கம் பயமுறுத்தி வந்தாலும், மறுபுறம் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அதிகளவிலான பணிநீக்கம் செய்தது மூலம் ஊழியர்கள் மத்தியில் மிகவும் மோசமான வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்கியது.

பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் அனைத்தும் செலவுகளைக் குறைப்பதற்காக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது, ஆனால் பணிநீக்கத்தை எதிர்கொண்ட ஊழியரின் குடும்பமே இதனால் பாதிப்பு அடைந்தது.

இதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பணியாற்றிச் சம்பாதிக்கும் வீடுகளில் பணிநீக்கம் என்பது அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடக் கூடிய ஒன்றாக உள்ளது.

இப்படியிருக்கையில் 2023 ஆம் ஆண்டிலும் இது தொடர்கிறது என்பது பல கோடி ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெக் நிறுவனங்கள்

டெக் நிறுவனங்கள்

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் டெக் துறை நிறுவனங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகளவிலான கடன் நிதி மூலம் இயங்கி வருகிறது, தற்போது வட்டி விகித உயர்வாலும், விலைவாசி உயர்வாலும் அனைத்து தரப்பு வர்த்தகமும் குறைந்த நிலையில், பணிநீக்கம் முக்கியச் செலவின கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அமைந்துள்ளது.

நவம்பர் மாதம்

நவம்பர் மாதம்

டெக் துறை நிறுவனங்கள் மட்டும் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் 52,771 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் ஒரு சில சிறிய மற்றும் பிரபலமான நிறுவனங்கள் பணிநீக்கம் அறிவித்த நிலையில், தாமதமாகச் செய்யப்பட்ட பணிநீக்கம் எனக் கணக்கிடப்பட்டது.

அமேசான்

அமேசான்

ஆனால் அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்ட போது அனைத்துத் தரப்பு ஊழியர்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

18000 ஊழியர்கள் பணிநீக்கம்

18000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமேசான்.காம் 2022லேயே 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில், நேற்று இந்நிறுவனத்தின் சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி நிலையற்ற பொருளாதாரம் மற்றும் அளவுக்கு அதிகமாக ஊழியர்களைப் பணியில் சேர்த்த காரணத்தால் ஜனவரி 18 முதல் 18000 ஊழியர்களுக்கும் அதிகமாகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

vimeo

vimeo

வீடியோ சேவை அளிக்கும் vimeo வெளியிட்டு உள்ள அறிவிப்பில் உலகளாவிய தனது வர்த்தகத்தில் 11 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்கப் பங்குச்சந்தையில் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது.

கூகுள்

கூகுள்

இதற்கிடையில் உலகிலேயே மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள் 2022 ஆம் ஆண்டு முதல் 6 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை இதுவரையில் வெளியிடவில்லை என்பது மிகவும் முக்கியமான விஷயம்.

ஸ்விக்கி

ஸ்விக்கி

இதற்கிடையில் இந்தியாவில் ஸ்விக்கி நிறுவனம் 2022 ஆம் ஆண்டின் இறுதியிலேயே பணிநீக்கம் குறித்த முடிவை எடுத்தாலும் அறிவிக்காமல் இருந்தது. ஆனால் கடந்த வாரம் இந்நிறுவனத்தின் நிதியியல் முடிவுகளில் நஷ்ட அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் பணிநீக்கத்தைத் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

2023 IMF எச்சரிக்கை

2023 IMF எச்சரிக்கை

2023 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் ஐஎம்எப் முதல் பல அமைப்புகள் கணித்துள்ளது மட்டும் அல்லாமல் பல நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ரெசிஷனுக்குள் நுழையும் எனத் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+