மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) 138 பெட்டிங் ஆப் மற்றும் சீன நிறுவனம் அல்லது சீன நபர்கள் உடன் தொடர்புடைய 94 கடன் வழங்கும் செயலிகளைத் தடை செய்யும் பணிகளைத் துவங்கியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இந்த அதிரடி முடிவுகள் மூலம் நெதர்லாந்து நாட்டின் மிகப்பெரிய முதலீட்டு நிறுவனமான Prosus-இன் பேமெண்ட் மற்றும் பின்டெக் சேவை நிறுவனமான PayU இந்தியா பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது. இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் பல முன்னணி நிறுவனத்தில் Prosus முதலீடு செய்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கையால் PayU நிறுவனத்தின் LazyPay சேவை முடக்கப்பட்டு உள்ளது.
PayU நிறுவனம்
PayU நிறுவனத்தின் LazyPay இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் buy-now-pay-later சேவையை அளித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் LazyPay நிறுவனத்தின் இணையதளம் முடக்கப்பட்டு உள்ளது. இதை LazyPay நிர்வாகம் மத்திய அரசு ஐடி சட்டம் 2000 கீழ் இணையதளத்தை முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
LazyPay இணையதளம் முடக்கம்
மேலும் LazyPay இணையதளம் முடக்கப்பட்டது போலவே Kissht என்னும் மற்றொரு கடன் சேவை அளிக்கும் நிறுவனத்தின் சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் யாரும் Kissht மற்றும் LazyPay சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் உள்ளது.
Kissht நிறுவனம்
இதில் Kissht நிறுவனத்தில் முன்பு சீன நிறுவனமான Fosun சுமார் 17 சதவீத பங்குகளை வைத்திருந்தது, ஆனால் பின்னாளில் இந்தப் பங்குகளைச் சிங்கப்பூர் அரசு நிதி அமைப்பிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் Kissht நிறுவன செயலி முடக்கப்பட்டு உள்ளது.
PayU நிறுவன விளக்கம்
"தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, சில இண்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனத்தின் மூலம் எங்கள் இணையதளம் மற்றும் செயலிகள் தற்போது பயன்படுத்த முடியாமல் உள்ளது. சிக்கலைத் தீர்க்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம் என்பதை உறுதியாக நம்புங்கள்"என்று PayU நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கிஸ்ஷ்ட் நிறுவன விளக்கம்
கிஸ்ஷ்ட் இணை நிறுவனர் ரன்வீர் சிங் இதுகுறித்து கூறுகையில் "எங்கள் சேவைகளைப் பெறும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இதை விரைவில் சரிசெய்ய மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (MeitY) அணுகுகிறோம். சேவை நிறுத்தம் மூலம் எங்களுடைய செயல்திறன் கடுமையாகப் பாதிக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
சீன செயலிகள்
மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பாதகம் எனக் கூறி சுமார் 250 சீன செயலிகளைத் தடை செய்தது. தற்போது பின்டெக் மற்றும் பெட்டிங் துறையில் 232 செயலிகளைத் தடை செய்யும் மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
903 புகார்கள்
ஏப்ரல் 1, 2022 முதல் நவம்பர் 30, 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 903 புகார்கள் கடன் செயலிகள் மூலம் மக்களை ரெக்கவரி ஏஜென்ட்கள் தொல்லை செய்கிறார்கள், இது மட்டும் அல்லாமல் கடன் வாங்கியவர்களிடம் மிகவும் தவறாக நடந்துகொள்கிறார்கள் எனப் புகார் செய்யப்பட்டு உள்ளது.
ஆர்பிஐ
2021ல் கடன் செயலிகள் குறித்து ஆர்பிஐ தனிக் குழுவை அமைத்து ஆய்வு செய்த போது அதில் பெரும் பெரும்பாலான நிறுவனங்கள் ஆர்பிஐ விதிமுறைகளுக்குக் கீழ் இயங்குவதும் இல்லை, அதன் கட்டுப்பாட்டுக்கும் வருவது இல்லை எனத் தெரிய வந்தது.
கூகுள் நிறுவனம்
இதேவேளையில் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 2000 கடன் செயலிகளைக் கூகுள் நிறுவனம் தனது ப்ளே ஸ்டோர் விதிமுறைகளை மீறுவதாக அறிவித்து நீக்கியது. இதேபோல் 2021ல் கூகுள் நீக்கிய 30 கடன் சேவை செயலிகளில் LazyPay-வும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications