டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம் டாடா சன்ஸ. இந்நிறுவனம் டாடா குழும நிறுவனங்களின் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் சுயாதீன இயக்குனராக இருந்த லியோ பூரி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேசமயம், தனது பதவிக் காலம் நிறைவடைந்ததால் லியோ பூரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும், தனது பதவி காலத்தை நீட்டிக்கும்படி அவர் கோரவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் இது தொடர்பாக டாடா சன்ஸ் நிறுவனம் உடனடியாக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை . மேலும் லியோ பூரியையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை என தகவல்.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து லியோ பூரி வெளியேறுவது நிறுவன உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாதத்துக்குள் ஒரு நிறுவனத்தின் உயர் முடிவெடுக்கும் அமைப்பிலிருந்து இரண்டாவது முறையாக வெளியேறுவதை இதற்கு காரணம். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பிரபல நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில் தனது பதவியை ராஜிமானா செய்தது குறிப்பிடத்தக்கது.
நிதி மற்றும் ஆலோசனை துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவமுள்ள மற்றும் நிதித்துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் லியோ பூரி. அவர் மெக்கின்சி, வார்பர்க் பினகஸ் மற்றும் யுடிஐ அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் பல நிறுவனங்களில் இயக்குனர்களில் குழுவில் பணியாற்றி வருகிறார்.
2018 அக்டோபர் 12ம் தேதியன்று இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் சுயாதீன இயக்குனராக நியமிக்கப்பட்டார். 2023 அக்டோபர் 12ம் தேதி மீண்டும் சுயாதீன இயக்குனராக அந்நிறுவனத்தால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அதிகரித்து வரும் இயக்குனர்கள் குழு பொறுப்புகளை காரணம் காட்டி, 15 தினங்களுக்கு முன் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து சுயாதீன இயக்குனர் பதவியை லியோ பூரி ராஜினாமா செய்தார்.
இருப்பினும் அவர் வெளியேறுவதும் இந்த ஆண்டு ஜூன் 30முதல் அமலுக்கு வரும். தற்போது மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேபராட்டீஸ் மற்றும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் ஆகியவற்றின் குழுவில் ஒரு சுயாதீன இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவர் ஃபோர்டிஸ் ஹெலத்கேரின் தலைவராகவும் உள்ளார்.
2024 மார்ச்சில் தனியார் பங்கு நிறுவனமான அபெக்ஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி நிறுவனத்தில் அபெக்ஸ் ஆலோசகராகவும், அபெக்ஸ் இந்தியாவின் தலைவராகவும் சேர்ந்தார். அவரது நியமனத்தை தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தனியார் மூலதனம் மற்றும் பரந்த நிதி சேவை துறையில் லியோ பூரி பரந்த அனுபவத்தை கொண்டுள்ளார் என்று தெரிவித்து இருந்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications