நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் லைஃப் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி). எல்ஐசி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் மிகவும் நம்பகமான காப்பீட்டு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் உரிமை கோரல் தீர்வு விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. எல்ஐசி நிறுவனம் தனது அலுவலகங்கள் இன்று, நாளை மற்றும் திங்கட்கிழமை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்ட திங்கட்கிழமையும் தனது அலுவலகங்கள் திறந்திருக்கும் எல்ஐசி அறிவித்துள்ளது. புதிய நிதியாண்டு செவ்வாய்க்கிழமை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் உள்ள எங்களது அலுவலகங்கள் மார்ச் 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும். இந்த முடிவு சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதையும் பாலிசிதாரர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்பபதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இன்று முதல் திங்கட்கிழமை வரையிலான 3 தினங்களும் எல்ஐசி அலுவலகங்கள் திறந்திருக்கும் என்பதால் எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்கள் பிரீமியத்தை செலுத்தலாம். மேலும் புதிய காப்பீடு பாலிசி எடுக்க விரும்புபவர்களும் எடுக்கலாம்.

மார்ச் 12ம் தேதியன்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (இரிடா) வெளியிட்ட ஆலோசனையை தொடர்ந்து எல்ஐசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு காப்பீடு செய்யக்கூடிய தனிநபருக்கும் நிதி பாதுகாப்பை விரிவுப்படுத்துவதில் எல்ஐசி தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தி வருகிறது. எல்ஐசியின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த்த மொஹந்தி அண்மையில் பேட்டி ஒன்றில், கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த சமூகத்தினருக்கு மலிவு விலையில் காப்பீட்டை வழங்குவதில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது என்று தெரிவித்தார்.
எல்ஐசி தனது காப்பீட்டை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இந்த 2024-25ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், எல்ஐசி நிறுவனம் குழு ஆண்டு புதுப்பிக்கத்தக்க பிரீமியங்களில் 28.29 சதவீத உயர்வையும், தனிநபர் பிரீமியங்களில 7.9 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் கடந்த பிப்ரவரியில் மட்டும் மொத்தம் 12.04 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (2024 ஏப்ரல்-2025 பிப்ரவரி) தனிநபர் பிரீமியங்களாக ரூ52,328 கோடியை வசூல் செய்துள்ளது. தனிநபர் பிரிவு பாலிசிகளின் எண்ணிக்கை 1.46 கோடியை எட்டியது. எல்ஐசி நிறுவனம் காப்பீட்டு சேவை வணிகத்தில் மட்டுமல்ல பங்குச் சந்தை முதலீட்டாளராகவும் உள்ளது. பங்குகளில் மேற்கொள்ளும் முதலீட்டின் வாயிலாக கணிசமான வருவாயை எல்ஐசி ஈட்டி வருகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications