யெஸ் பேங்க் பிரச்சனையில் இருந்து எஸ்கேப் ஆகும் எல்ஐசி! எப்படி?

கடந்த மார்ச் 5-ம் தேதி யெஸ் பேங்கில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற கட்டுப்பாடு வந்தது.

அந்த கட்டுப்பாடு வந்த பின் தான் யெஸ் பேங்க் யாருக்கு எல்லாம் கடன் கொடுத்து இருக்கிறது, எவ்வளவு கடன் வாராக் கடனாக இருக்கிறது, சுமார் 6,300 கோடி ரூபாய் வாரா கடனை குறைத்துக் காட்டிய்து என பல பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வெளி வரத் தொடங்கின.

இப்போது மத்திய ரிசர்வ் வங்கி யெஸ் பேங்கை மறு சீரமைக்க ஒரு திட்டத்தை வகுத்துக்கொண்டு இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

எல்ஐசி யெஸ்பிஐ

எல்ஐசி யெஸ்பிஐ

இந்த மறு சீரமைப்பு திட்டத்தில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (LIC) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களும் பெரிய அளவில் பங்களிக்கலாம் என பலரும் கணித்தார்கள். ஆக இந்த இரண்டு நிறுவனங்களும் யெஸ் பேங்கில் கணிசமான பங்குகளை வாங்கி யெஸ் பேங்கை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

10% விதி

10% விதி

மத்திய ரிசர்வ் வங்கியின் Ownership in Private Sector Banks, Directions, 2016 விதிகள் படி, யெஸ் பேங்க் நிறுவனத்தில், மத்திய அரசின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, அதிகபட்சமாகவே 10 சதவீத பங்குகளை மட்டுமே வாங்கிக் குவிக்க முடியுமாம். ஏற்கனவே யேஸ் பேங்கில் சுமாராக 8.06 சதவிகித பங்குகளை எல்ஐசி வாங்கி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மேற்கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்றால் கூட 1.94 % பங்குகளைத் தான் எல்ஐசி வாங்க வேண்டி இருக்கும்.

எஸ்பிஐ தலைவர்

எஸ்பிஐ தலைவர்

யெஸ் பேங்க் நிறுவன பங்குகளை எல்ஐசி நிறுவனமும் வாங்குமா என கேள்வி எழுப்பிய போது " ஏற்கனவே யெஸ் பேங்க் நிறுவனத்தில் எல்ஐசி ஒரு கணிசமான பங்கை வைத்திருக்கிறது என நினைக்கிறேன். இதுவரை யெஸ் பேங்க் நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய சொல்லி எங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம் எல்ஐசி நிறுவனத்திடமும் கேட்கவில்லை" எனச் சொன்னார் எஸ்பிஐ தலைவர்.

வரலாம்

வரலாம்

"எனவே எல்ஐசி நிறுவனம் கட்டாயமாக யெஸ் பேங்க் வங்கியில் மேற்கொண்டு முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருவேளை எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால், மத்திய ரிசர்வ் வங்கியின் அந்த பத்து சதவிகித அளவுக்குள் தாராளமாக முதலீடு செய்யலாம்" எனச் சொல்லி இருக்கிறார் எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார்

மற்ற முதலீட்டாளர்கள்

மற்ற முதலீட்டாளர்கள்

மேற்கொண்டு பேசிய யெஸ்பிஐ தலைவர் " ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி உடன், யெஸ் பேங்கில் முதலீடு செய்ய பல முதலீட்டாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் முதலீட்டாளர்களை தேர்வுசெய்து விடுவோம். தேர்வு செய்தவர்களின் விவரங்களை மத்திய ரிசர்வ் வங்கி உடன் பகிர்ந்து கொண்டு, அடுத்து ஆக வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம் எனச் சொல்லி இருக்கிறார்.

எஸ்கேப் ஆன எல்ஐசி

எஸ்கேப் ஆன எல்ஐசி

ஆக எது எப்படியோ, இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியான எல் ஐ சி-யிடம் இருந்து காசு வாங்கி யெஸ் பேங்கை காப்பாத்த சூழல் நிலவுகிறது. எனவே யெஸ் பேங்க் பிரச்சனையில் இருந்து எல்ஐசி எஸ்கேப் ஆனதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+