டாடா குழும பங்கினை வாங்கி போட்ட எல்ஐசி.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

டாடா குழுமத்தினை சேர்ந்த மற்றொரு ஐடி நிறுவனம் தான் டாடா எல்க்ஸி. பெங்களூரினை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், ஆட்டோமொபைல் துறை, ஓளிபரப்பு, கம்யூனிகேஷன்ஸ் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் வடிவமைப்பு (Design) மற்றும் தொழில் நுட்ப சேவைகளை செய்யும் நிறுவனமாகும்.

இந்த சேவைகளை கிளவுட், மொபைலிட்டி, விர்சுவல் ரியாலிட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் செய்து வருகின்றது.

டாடா எல்க்ஸி - எல்ஐசி

டாடா எல்க்ஸி - எல்ஐசி

இப்படிப்பட்ட டாடா எல்க்ஸி நிறுவனத்தின் பங்கினைத் தான் எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளது. இது குறித்து டாடா எல்க்ஸி நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்த பங்கினை எல்ஐசி மூன்றாவது காலாண்டில் வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ஏனெனில் செப்டம்பர் காலாண்டில் எல்ஐசி இந்த நிறுவனத்தில் எந்த பங்கினையும் வைத்திருக்க வில்லை.

எல்ஐசி வசம்

எல்ஐசி வசம்

டிசம்பர் காலாண்டில் எல்ஐசி-யிடம் டாடா எல்க்ஸியின் 1.04% பங்குகள் உள்ளன. அதாவது எல்ஐசி வசம் 6,49,786 பங்குகள் உள்ளதாக பிஎஸ்இ தரவுகள் சுட்டி காட்டுகின்றது.

எனினும் அதேசமயம் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் பங்குகளை 3.60% அல்லது 22,44,448 பங்குகளாக டிசம்பர் காலாண்டில் குறைந்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 3.84% ஆக இருந்தது.

பங்கு விலை ஏற்றம்

பங்கு விலை ஏற்றம்

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்ட இந்த நிறுவனம் ஒரு வருடத்தில் 188% அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆறு மாத காலத்தில் இந்த மல்டிபேக்கர் பங்கு 39% மேல் அதிகரித்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 58.9% அதிகரித்து, 125 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 78.8 கோடி ரூபாயாக இருந்தது நினைவுகூறத்தக்கது.

இன்றைய பங்கு விலை நிலவரம்

இன்றைய பங்கு விலை நிலவரம்

இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது என். எஸ்.இ-யில் 2.95% அதிகரித்து, 6114.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய உச்ச விலை 6167 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 5950 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.

இதே பி.எஸ்.இ-யில் 3.32% அதிகரித்து 6135 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே இந்த நிறுவனத்தின் இன்றைய உச்ச விலை 6178 ரூபாயாகவும், இதே இன்றைய குறைந்தபட்ச விலை 5952 ரூபாயாகவும் முடிவடைந்துள்ளது.இதன் 52 வார உச்ச விலை 6780 ரூபாயாகவும், இதே 52 வார குறைந்தபட்ச விலை 2025.05 ரூபாயாகவும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+