இனி தங்கம், வெள்ளியில் அதிக முதலீடு போடாதீங்க.. பிரபல முதலீட்டாளர் எச்சரிக்கை..!!

தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்கள் கடந்த ஒரு வருடத்தில் வரலாற்று உச்ச விலையை தொட்டு அதன் முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான லாபத்தை கொடுத்து வரும் இந்த சூழலிலும், மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் வி.ஆர், தங்கம், வெள்ளி மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலீட்டாளர்கள் தங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான மொத்த ஒதுக்கீட்டை 8 முதல் 10% என்ற வரம்புக்குள் வைத்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அதே சமயம், சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதால், பாதுகாப்பான முதலீடான கடன் பத்திரங்களுக்கான (Debt) ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் அவர் பரிந்துரை செய்துள்ளார்.

இனி தங்கம், வெள்ளியில் அதிக முதலீடு போடாதீங்க.. பிரபல முதலீட்டாளர் எச்சரிக்கை..!!

சந்தையின் தற்போதைய நிலை மற்றும் சவால்கள்:
நிலையான வரவுகள்: இந்திய பங்குச்சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக இருந்த ஏற்றங்கள் இந்த நிதியாண்டிலும் தொடர்கின்றன. இந்திய கார்ப்ரேச் நிறுவனங்களின் மெதுவான வருவாய் வளர்ச்சி, பங்குகளின் அதிக மதிப்பீடுகள் பிரச்சனை மற்றும் செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான சந்தை வீழ்ச்சி, ஆகியவற்றுக்கு பின்னரும் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி (SIP) வரவுகள் உறுதியாகவே உள்ளன. இதனால் முதலீட்டு போர்ட்போலியோவில் பங்குகள் மீதான முதலீட்டை அடிப்படையாக வைக்க அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன்.

நுகர்வு நம்பிக்கை: மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் மற்றும் பணவியல் தளர்த்தல் மூலம் இந்தியாவில் நுகர்வுக்குச் கணிசமான ஊக்கத்தை அளித்துள்ளதால், நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் காணப்படும் சமீபத்திய நம்பிக்கை ஓரளவு நியாயமானது. அதே சமயம், ஐடி உள்ளிட்ட துறைகளில் நம்பிக்கையின்மை நிலவுகிறது.

முதலீட்டு உத்தி மற்றும் சொத்து ஒதுக்கீடு: பெரும்பாலான இந்திய முதலீட்டாளர்களுக்கு, உள்நாட்டு பங்குகள் அடிப்படை ஒதுக்கீடாகவே இருக்க வேண்டும். நீண்ட கால முதலீட்டு இலக்குகளை கொண்டவர்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

தற்போதைய சூழலில், பங்கு சந்தை மதிப்பீடுகள் உச்சத்தில் இருப்பதால், கடன் பத்திரங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது சிறந்த தேர்வாகும். தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் கடந்த ஓராண்டில் சாதனை வருமானத்தைக் கொடுத்திருப்பதால், விலை உயர்ந்த உலோகங்களுக்கு 8 முதல் 10% க்கு மேல் ஒதுக்க வேண்டாம் என்று கிருஷ்ணன் விரும்புகிறார்.

நுகர்வுக்கு ஊக்கம்: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 60% நுகர்வு சந்தையின் வாயிலாகவே இருக்கிறது. வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி குறைப்புகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் மூலம் அரசு ரூ.4.6 லட்சம் கோடி மதிப்பிலான நுகர்வு ஊக்கத்தை அளித்துள்ளது. இது நுகர்வு சார்ந்த பங்குகளுக்கு குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் ஊக்கமளிக்கும்.

முதலீடு செய்ய உகந்த துறைகள்:
சுகாதார சேவைகள் (Healthcare): அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் அதிகரிக்கும் சுகாதார சேவைப் பயன்பாடு, மருத்துவமனைகள், நோய் கண்டறியும் மையங்கள் மற்றும் உடல்நலக் காப்பீடு போன்றவற்றுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிச் சேவைகள் (Financial Services): காப்பீடு, RTAs, டெபாசிட்டுகள் மற்றும் செல்வ மேலாண்மை ஆகியவற்றில் உள்ள நிறுவனங்கள், வீட்டு சொத்துக்களை நிதிச் சொத்துக்களாக மாற்றும் கட்டமைப்புப் போக்கிற்கு சாதகமான நிலையில் உள்ளன.

முதலீட்டாளர்களுக்கான முக்கிய குறிப்புகள்:
ஆபத்து தாங்கும் திறன்: குறைந்த ரிஸ்க் தாங்கும் திறன் கொண்டவர்கள் அல்லது தங்களது நிதி இலக்குகளை நெருங்கி வருபவர்கள், தங்கள் முதலீடுகளை பல்வேறு சொத்து வகுப்புகளுக்கு பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

நீண்ட கால முதலீட்டாளர்கள்: நீண்ட கால முதலீட்டு கண்ணோட்டம் கொண்டவர்களுக்கு, பணவீக்க பாதிப்பை வெல்வதற்கு, தற்போதுள்ள அதிக மதிப்பீட்டிலும் கூட பங்குகளில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாகும்.

போர்ட்ஃபோலியோ சமநிலை: கடந்த 5 ஆண்டுகளாக முதலீட்டில் நீடித்தவர்கள், இச்சமயம் தங்கள் போர்ட்ஃபோலியோவை சமநிலைப்படுத்தி, கடன் பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி திருப்புவது நல்லதாகும்.

SMID பங்குகளில் கவனம்: சிறிய மற்றும் நடுத்தர நிறுவன (SMID) பங்குகளின் ஒட்டுமொத்த குறியீட்டில் முதலீடு செய்வது தற்போது எச்சரிக்கையைத் அதிகரிக்கிறது. அதிக மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட, அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தும் அணுகுமுறை தேவை. நிறுவனத்தின் அடிப்படை காரணிகளில் கவனம் செலுத்தி, விழிப்புணர்வுடன் அணுகினால் SMID பங்குகளில் குறிப்பிடத்தக்க வருமானத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது என கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+