தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றன. மோசடி செய்பவர்கள் புதிய வழிகளை கண்டு பிடித்து, பொதுமக்களின் நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருட முயல்கின்றனர். சமீபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தொழில்நுட்ப நிபுணர் எதிர்பாராத முறையில் ஒரு மோசடி முயற்சிக்கு இலக்காகியுள்ளார். இவரது அனுபவம் சமூக ஊடகங்களில் பரவி, பலரிடமும் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
LinkedIn என்பது தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமாக இருக்கும் நிலையில், இப்போது அது மோசடிக்காரர்களின் இலக்காக மாறி வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த இந்த பெண்ணிடம், ஒரு மூன்றாம் நபர் அவளது LinkedIn கணக்கை பணத்திற்கு வாடகைக்கு விட தயாரா எனக் கேட்டிருந்தார்.இந்த தகவல் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஏனெனில் இதற்கு முன் இதுபோன்ற ஒரு யோசனை அவர் கேட்டதே இல்லை. இது வேலை வாய்ப்புகளைப் பகிரும், தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் தளமாக இருக்கும் நிலையில், கணக்குகளை வாடகைக்கு விடுமாறு கூரியது விசித்திரமான விஷயமாக இருந்தது.

அந்த நபர், LinkedIn கணக்குகளை "கடன் வாங்க" விரும்புவதாக கூறினார்.அந்தப் பெண், "வாடகை" என்றால் என்ன என்று கேட்டபோது, அந்த நபர், "நாங்கள் உங்கள் கணக்கைப் பயன்படுத்தி தொழில்முறை நோக்கத்திற்காக சந்தையை விரிவாக்க விரும்புகிறோம்" என்று கூறினார். மேலும், "உங்கள் கணக்கு தடை செய்யப்படவில்லை என்றால், நீங்கள் எந்தப் பாதிப்பையும் எதிர்கொள்ளப் போவதில்லை" எனவும் உறுதி அளித்தார்.மேலும், இதற்காக வாரத்திற்கு $20 வழங்க முடியும் என்றும் கூறினார்.இதில் மிகவும் கவலைக்கிடமான விஷயம் என்னவெனில், அந்த நபர், LinkedIn கணக்கின் உள்நுழைவுச் சான்றுகளை (login credentials) வழங்குமாறு கேட்டுள்ளார். இதன் மூலம், அவர்கள் அந்த கணக்கைப் பயன்படுத்தி வேறு சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பதற்கான வாய்ப்பே அதிகம்.
அந்த பெண், இதன் பின்னணி நோக்கம் என்னவென்று கேட்டால். அப்போது, அதற்காக எதுவும் செய்ய வேண்டியதில்லை, ஆனால் அவ்வப்போது கணக்கின் கட்டுப்பாட்டை மாற்றும் நிலை வரலாம் என அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்காக, அவளது தனிப்பட்ட தொடர்புகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
இது மிகவும் சந்தேகத்திற்கிடமானதாக இருந்ததால், அந்தப் பெண் உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு எச்சரித்தார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதும், பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.ஒருவர், "நானும் LinkedIn-ல் போலி வேலை வாய்ப்பு பற்றி அனுபவித்தேன். WhatsApp மூலம் தொடர்பு கொண்டு, பணத்தை செலுத்தி பயிற்சியில் சேருமாறு கூறினார்கள்" என்று தெரிவித்தார். பின்னர், அந்தக் கணக்கு LinkedIn-ல் நீக்கப்பட்டது.மற்றொருவர், "இது மிகவும் அபாயகரமான மோசடி. இதற்கு எதிராக LinkedIn நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கருத்து தெரிவித்தார்.
இந்த பெங்களூரு பெண் பகிர்ந்துள்ள அனுபவம் நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை. தொழில்முறை நெட்வொர்க்கிங் தளங்களைப் பயன்படுத்தும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மோசடிக்காரர்கள் புதுப்புது யுக்திகளை கையாளுவதால், பயனர் விழிப்புணர்வு மிக அவசியமாகிறது.அதே நேரத்தில், LinkedIn போன்ற நிறுவனங்களும் இதுபோன்ற மோசடிகளை தடுக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தாலே, இது போன்ற மோசடிகளை தவிர்க்க முடியும். தயவுசெய்து, உங்கள் LinkedIn கணக்கு மற்றும் தொழில்முறை தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்!
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications