சென்னை: வீடு கட்ட, தொழில் தொடங்க என பல தேவைகளுக்காக வங்கிகளில் கடன் வாங்குகிறோம். இது போன்ற கடன்களை வாங்க சிறிது காலம் ஆகும். இதனால் நமது அவசர தேவைக்கு வங்கிகளில் விரைவாக கடன் வாங்க முடியாது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது ஆனால் அது உண்மையல்ல.
நமது அவசர தேவைக்கு வங்கிகளில் விரைவாக கடன் வாங்கலாம். வங்கிகளில் தனிநபர் கடன் மற்றும் தங்கம், சொத்து, பரஸ்பர நிதி, கார் உள்ளிட்ட சொத்துகள் மீது வங்கிகள் விரைவாக கடன் வழங்குகின்றன.
இது போன்ற கடன்களை வாங்குவதில் சில சாதக, பாதகங்கள் உள்ளன. அவற்றை நாம் பார்ப்போம்.

தனிநபர் கடன்: உங்கள் கடன் தகுதி நன்றாக இருந்தால் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம். இந்த கடன்கள் விரைவாக வழங்கப்படுகின்றன. தனிநபர் கடன் (Personal loan) பெறுவதற்கு எந்த சொத்தையும் பிணையம் அளிக்க வேண்டியதில்லை. தனிநபர் கடனுக்கு 10 முதல் 29 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படலாம். இந்த கடனுக்கு எந்த பிணையமும் தேவையில்லை என்பதால் நீங்கள் கடனை திருப்பி செலுத்த தவறிவிட்டால் வங்கிகளால் உங்கள் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது. இதனால் தனிநபர் கடன்களுக்கு வட்டி அதிகம்.
கார் மீது கடன்: இந்த கடனை பெற நீங்கள் உங்கள் காரை பிணையமாக வைக்க வேண்டும். காரின் மதிப்பில் 50 முதல் 200 சதவீதம் வரை கடன் பெறலாம். இந்த வகையான கடன்களுக்கு 10 முதல் 22 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. உங்கள் கார் மாடலுக்கு நல்ல மறுவிற்பனை மதிப்பு இருந்தால், நீங்கள் பெரிய கடன் தொகையை பெறலாம். அதேசமயம் உற்பத்தியில் இல்லாத மாடல்கள் கடன் பெற தகுதியற்றவை.
மியூச்சுவல் பண்ட், பங்குகள் மீதான கடன்: பரஸ்பர நிதி மற்றும் பங்குகள் மீதான கடனுக்கு 9 முதல் 11.25 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த கடனை பெற நீங்கள் உங்கள் பரஸ்பர நிதி மற்றும் பங்குகளை பிணையமாக கொடுக்க வேண்டும். மேலும் பரஸ்பர நிதி மற்றும் பங்குகளின் மதிப்பில் குறிப்பிட்ட அளவை கடனாக பெற முடியும். எச்.டி.எஃப்.சி. வங்கியின் இணையதளத்தின்படி, பங்குகளின் தற்போதைய மதிப்பில் 50 சதவீதம் வரை கடன் பெறுங்கள். பங்கு பரஸ்பர நிதி என்றால் அதன் நிகர சொத்து மதிப்பில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். கடன் பரஸ்பர நிதி மற்றும் எஃப்.எம்.பி. என்றால் அதன் நிகர சொத்து மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் பெறுங்கள்.
கடனை திருப்பி செலுத்தும்போது யூனிட் ஹோல்டருக்கு ஈவுத்தொகை வழங்கப்படுகிறது. அதேசமயம் வங்கிகளால் அந்த பங்குகளை விற்பனை செய்ய முடியும் அல்லது பங்கு விலையில் சரிவு ஏற்பட்டால் கூடுதல் முதலீடு செய்யும்படி உங்களிடம் கேட்கலாம் என்பது இந்த கடனில் உள்ள மைனஸ் விஷயம்.
பிக்சட் டெபாசிட்களுக்கு கடன்: வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தை விட 0.50 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை கூடுதலாக இந்த வகை கடன்களுக்கு வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன. இந்த கடனை பெற உங்கள் வங்கி நிரந்த வைப்பு (பிக்சட் டெபாசிட்) பிணையமாக கொடுக்க வேண்டும். பிக்சட் டெபாசிட்டின் மதிப்பில் 70 முதல் 95 சதவீதம் வரை கடன் பெறலாம். எஸ்.பி.ஐ. இணையதளத்தின்படி, உங்கள் குறித்த கால வைப்புத்தொகையின் மதிப்பில் 95 சதவீதம் வரை கடன் பெறலாம்.
பிக்சட் டெபாசிட் மீதான கடன் என்பது செலவு குறைந்த மற்றும் எளிதான சாத்தியமான கடன்களின் ஒன்றாகும். கூடுதலாக ஆவணங்கள் தேவைப்படாது. கடன் ஹிஸ்டரி சரிபார்ப்பு இல்லை, குறைவான வட்டி விகிதம் மற்றும் கடன் விரைவாக வழங்கப்படும்.
சிறுவர் அல்லது சிறுமியர் பெயரில் உள்ள பிக்சட் டெபாசிட்க்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை. பிக்சட் டெபாசிட் கூட்டாக இருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் கடன் ஆவணங்களில் கையொப்மிட வேண்டும் மற்றும் திருப்பி செலுத்துவதற்கும் அவர்கள் அனைவரும் பொறுப்பு. கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் நிலுவை தொகையை வசூலிக்க வங்கி கணக்கை வங்கிகள் மூடலாம்.
ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மீது கடன்: இந்த கடன்களுக்கு, பாலிசிக்கு ஏற்கனவே செலுத்தப்பட்ட பிரீமியம் மற்றும் பிரீமியங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. பிரீமியங்களின் தொகை மற்றும் எண்ணிக்கை அதிகமாக இருநதால் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்கும். இந்த வகை கடனை பெற உங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசியை பிணையாக அளிக்க வேண்டும். பாலிசியின் சரண்டர் மதிப்பில் 85 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கடன் பெறலாம். வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்தும் பாலிசி மீது கடன் வழங்குகின்றன. இருப்பினும் அனைத்து பாலிசிகளும் கடனுக்கு தகுதியானவை அல்ல. கடன் வழங்குபவரின் பெயரில் பாலிசி ஒதுக்கப்பட வேண்டும். கடன் மற்றும் வட்டி பாலிசியின் மதிப்பை விட அதிகமாக இருந்தால் பாலிசி காலாவதியாகலாம்.
சொத்து மீதான கடன்: சொத்து மீதான் கடன்களுக்கு 8.50 சதவீதம் முதல 18 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகிறது. உங்கள் சொத்தை பிணையமாக அளிக்க வேண்டும். சொத்து மதிப்பில் 60 முதல் 70 சதவீதம் வரை பெறலாம். வீட்டுக் கடனை போன்றதுதான் ஆவணப்படுத்துதல் ஆனால் செயலாக்க நேரம் குறைவு. முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் பொருந்தும் அது அசல் தொகையில் 3 முதல் 5 சதவீதம் வரை இருக்கும்.
தங்கக் கடன்: தங்கக் கடனுக்கு 8 முதல் 24 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த கடனை பெற தங்கத்தை பிணையமாக அளிக்க வேண்டும். கோடக் மகிந்திரா வங்கி தகவல்களின்படி, உங்கள் கடன்களின் வரம்பு நீங்கள் வழங்கும் தங்க சொத்துகளின் மதிப்புக்கு நேரடியாக விகிதாசாரமாகும். இருப்பினும் ஒரு வாடிக்கையாளர், குடும்பம், குழு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் அதிகபட்சம் ரூ.1.50 கோடியை எந்த நேரத்திலும் வங்கியின் விருப்பப்படி பெறலாம். மதிப்புக்கு கடன் 65 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை இருக்கும்.
தங்கக் நகை கடன் சில மணி நேரங்களில் அனுமதிக்கப்படும். கடன் பெற அதிக ஆவணங்கள் தேவையில்லை. உங்கள் தங்கத்தை அடமானம் வைக்க வேண்டும், கடனை குறித்த காலத்தில் திருப்பி செலுத்தாவிட்டால் கடன் வழங்குபவரால் விற்கப்படலாம். 18 முதல் 22 காரட் தங்க நகைகளுக்கு மட்டுமே வங்கிகள் தங்க கடன் வழங்கும். ஒரு வாடிக்கையாளருக்கு 50 கிராம் வரை மட்டுமே தங்க கடன் வழங்க முடியும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications