இந்திய பங்குச் சந்தையில் ஏராளமான மல்டிபேக்கர் பங்குகள் உருவாகியுள்ளது. இந்த மல்டிபேக்கர் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத வருமானத்தை அள்ளிக் கொடுத்துள்ளன. அந்த வகையில் முதலீட்டாளர்களை செல்வந்தர்களாகிய ஒரு மல்டி பேக்கர் பங்குதான் லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி லிமிடெட். இரும்புத்தாது, மின் உற்பத்தி மற்றும் சுரங்கம் உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் நிறுவனம் லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி. இந்நிறுவனம் ஒவ்வொரு காலாண்டில் சராசரியாக ரூ.300 கோடிக்கு மேல் லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.6,521.65 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,243.14 கோடி சம்பாதித்துள்ளது. 2024 டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.389.53 கோடி ஈட்டியுள்ளது. அதே காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.1,675.17 கோடியாக இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் இந்நிறுவனத்தின் வலுவான நிதி நிலை முடிவுகளை வெளிப்படுத்துகிறது. நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவன பங்கும் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளன.

2020 மார்ச் மாதத்தில் லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவன பங்கு விலை ரூ.5க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது இப்பங்கின் விலை ரூ.1,183 என்ற அளவில் உள்ளது. ஆக, கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு விலை 7,865 சதவீதம் அல்லது 256 மடங்கு அதிகரித்துள்ளது. ஒருவர் 5 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.2.56 கோடியாக பெருகியிருக்கும். கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 808 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டில் இந்நிறுவன பங்கின் விலை 107 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 58.34 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம். கடந்த மாதத்தில் லாயிட்ஸ் மெட்டல்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவன பங்கின் விலை 15.36 சதவீதம் வீழ்ச்சி கண்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை ரூ.1,180.95ஆக இருந்தது. அதன்படி, இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.61,792.26 கோடியாக இருந்தது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications