கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகை கடன்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி, நகைகளுக்கு அதன் மதிப்பில் 90% வரை வழங்கப்பட்டு வரும் கடன், இனி 75% மட்டுமே வழங்கப்படும். நகைக்கான உரிமையாளர் யார் என்பதற்கான ரசீதை தாக்கல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
ஆனால், இதனை பலராலும் பூர்த்தி செய்ய முடியாது. ஏனென்றால், பொதுவாக நகைகள் எல்லாம் பல்வேறு நிகழ்வுகளில் பரிசாக, சீர்வரிசையாக கிடைக்கும். அதை கொடுப்பவர்கள் நம்மிடம் ரசீது கொடுக்க மாட்டார்கள். மேலும், நகையின் மதிப்பிற்கு குறைந்த கடன் வழங்கினால், ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன், தனது அமைச்சகம் மூலம் ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் எனவும், இது அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதன்படி, ரூ.2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85%, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 80%, ரூ.5 லட்சத்திற்கு அதிகமான கடனுக்கு 75% கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேபோல, ஒருவர் அதிபட்சமாக ஒரு கிலோ தங்கம் வரையும், 10 கிலோ வெள்ளி வரையும் வைத்து கடன் பெறலாம். மேலும், வங்கிகளில் நகை உரிமையாளருக்கான அடையாளம் குறித்த ரசீது கேட்கப்படாது. "இந்த நகை என்னுடையது தான்" என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது என அறிவித்துள்ளது.
மேலும், முக்கியமாக நகை கடன் தேதி முடிந்த பிறகும் எப்போதும் போல் புதுப்பித்துக் கொள்ளலாம். கூடுதல் கடனும் வரம்பின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த புதிய விதிகள் உடனே அமலுக்கு வருவதாகவும், அதிகபட்சமாக அடுத்தாண்டு (2026) ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் இதனை அனைத்து வங்கிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில் தங்க நகைக் கடன்களுக்கு உரிய Loan-to-Value (LTV) வரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பது, தங்க கடன்கள் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFC) வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று CRISIL (Credit Rating Information Services of India Limited) அறிக்கையில் தெரிவித்துள்ளது. LTV வரம்பு உயர்வு என்பது, ஒரு கிராம் தங்கத்திற்கு அதிக விலையில் கடன் வழங்க அனுமதிப்பதாகும். இந்த உயர்வு, Bullet Repayment Loans (இறுதியில் ஒரே தொகையாக செலுத்தும் கடன்கள்) தொடர்பான புதிய கணக்கீடு விதிமுறைகளை சீர்செய்யும்.
முன்னதாக, முதலில் வழங்கிய கடன் தொகையை மட்டும் கொண்டு LTV கணக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கடன் தவணை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து LTV கணக்கீடு செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது கடன் அளவைக் குறைக்கக்கூடியதாக இருந்தாலும், LTV வரம்பு உயர்வு அந்த எதிர்மறை தாக்கத்தை சமன்படுத்தும் என்று CRISIL கூறியுள்ளது.
இதுதொடர்பாக CRISIL மதிப்பீடுகள் இயக்குனர் மாளவிகா போதிகா கூறுகையில், "அதிக LTV-யில் (Loan-to-Value) கடன் வழங்குவது, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க குறைவான பாதுகாப்பு இடைவெளியை ஏற்படுத்தும். இதனால், இறுதிநிலை நஷ்டங்களை கட்டுப்படுத்த, கடுமையான அபாய மேலாண்மை நடைமுறைகள் மற்றும் சரியான நேரத்தில் ஏலங்கள் நடத்தும் முறைகளில் அதிக கவனம் தேவைப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!



Click it and Unblock the Notifications