இந்தியாவில் தினசரி உபயோகப்படுத்தப்படும் பல பொருட்களின் விலை உயர்வைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஆனால், சமூக வலைதளங்களில் சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, லண்டனிலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மிக அதிகமாக இருப்பதைக் சுட்டிக் காட்டி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் தினசரி உணவுப் பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதை குறித்து ஒரு வீடியோ இணையதளத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இணையதளத்தில் பலர் அவர்களின் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ "nine2fivelife" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.
லண்டனில் 20 ரூபாய்க்கு விற்கப்படும் தின்பண்டங்கள் தற்போது 95 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மேலும், லண்டன் சூப்பர் மார்க்கெட்டுகளில் மேகி நூடுல்ஸ் பாக்கெட் ரூ.300-க்கு விற்கப்படுகிறது. பகிரப்பட்ட வீடியோவில் வெண்டைக்காய் கிலோவுக்கு ரூ.650-க்கும், ஒரு பன்னீர் பாக்கெட் ரூ. 700-க்கும், பாகற்காய் கிலோவுக்கு ரூ.1000-திற்கும், 6 அல்போன்சா மாம்பழங்கள் ரூ. 2400-க்கும் விற்கப்படுகிறது என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது.
வீடியோவில் உள்ள அனைத்து பொருட்களின் விலையும் இந்திய விலையை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. உதாரணமாக குட் டே பிஸ்கெட்டின் விலை ரூ.10க்கு பதிலாக ரூ.100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் லிட்டில் ஹார்ட்ஸ் குக்கீஸ்களின் விலையும் ரூ.100 ரூபாயாக உள்ளது. 400 கிராம் பூஜியாவின் விலை ரூ. 100 மற்றும் ரூ. 110 ஆக விற்பனை இந்தியாவில் விற்பனை செய்யப்படும். ஆனால் லண்டனில் அதன் விலை 1000 ரூபாய்.
மேலும் பல பொருட்களின் விலை துபாயுடன் ஒப்பிடும் பொழுது பத்து மடங்கு லண்டனில் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தின்பண்டங்களில் விலை துபாயுடன் ஒப்பிடும் பொழுது நமது இந்தியாவில் அதிகமாக உள்ளது. 50 கிராம் பார்லே ஜி பிஸ்கட்டின் 24 பேக்குகளின் விலை 8.25 திர்ஹாம்கள். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.186 ஆகும். இதன் மூலம், லண்டனில் உள்ள பொருட்களின் விலைகள் துபாயை விடவும் அதிகமாக இருப்பது தெளிவாகிறது.
லண்டனில் இந்த விலை உயர்வு உலக மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த வீடியோ உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வாழ்க்கைச் செலவு வேறுபாடுகளை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. எந்த நகரத்திற்கு பயணம் செய்ய வேண்டும் அல்லது எங்கு வசிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் போது வாழ்க்கைச் செலவு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த விலை வேறுபாடுகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம், அவை நாணய மதிப்பு, இறக்குமதி கட்டணங்கள், உள்ளூர் உற்பத்தி மற்றும் தேவை போன்றவற்றை பொறுத்தே விலையும் அமைகிறது. எனவே, வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்லும்போது அல்லது வெளிநாட்டில் வசிக்கும்போது, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை முன்கூட்டியே தெரிந்து வைப்பது அவசியம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications