இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் ஆதார் அட்டை, ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். பல அரசாங்க சேவைகளை பெற ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இது நாட்டில் பயன்படுத்தப்படும் ஆவணங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது முதல் வங்கிக் கணக்கைத் திறப்பது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் தேவைப்படுகிறது. இவ்வளவு முக்கியமான ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
உங்கள் ஆதார் அட்டை தொலைந்துவிட்டதா,கவலை பட வேண்டாம். அதை மீட்டெடுக்க சில வழிகள் உள்ளன. ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைத்து இருந்தால் தொலைந்து போன ஆதார் எண்ணை மீட்டெடுக்க முடியும்.

ஆதார் நம்பரை எவ்வாறு தெரிந்து கொள்வது?:
ஸ்டெப் 1: UIDAI-இன் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தைப் பார்வை இடலாம்.
ஸ்டெப் 2: தற்போது உங்களுக்குத் தேவை என்ன என்பதை தேர்ந்தெடுக்கவும். சான்றாக ஆதார் அல்லது EID என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஸ்டெப் 3: ஆதார் கார்டில் உள்ளபடி உங்களுடைய பெயர், மொபைல் நம்பர், மெயில் ஐடி போன்றவற்றை என்டர் செய்து "Send OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: தற்போது ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களுடைய மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். அதனைப் பயன்படுத்தி OTP-ஐ என்டர் செய்து, உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். அதன் பிறகு SMS மூலம் உங்களுடைய ஆதார் நம்பர் உங்களுக்கு அனுப்பப்படும்.
உங்கள் தொலைபேசி எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று ஆதார் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஸ்டெப் 1: ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.
ஸ்டெப் 2: உங்கள் பெயர், பாலினம், பகுதி அல்லது பின்கோடு போன்ற தேவையான தகவல்களை வழங்கவும்.
ஸ்டெப் 3: உங்களால் உடனடியாக உங்கள் தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், பிறந்த ஆண்டு, மாநிலம் போன்றவற்றை வழங்கவும்.
ஸ்டெப் 4: கைரேகை அல்லது கருவிழி ஸ்கேனிங்கைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பெறவும்.
ஸ்டெப் 5: அனைத்து பொருத்தங்களும் உறுதி செய்த பிறகு, ஆபரேட்டர் உங்கள் இ-ஆதார் கடிதத்தை பிரிண்ட் செய்து தருவார்.
ஸ்டெப் 6: இந்த சேவைக்கு ரூ.30 வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
சில நேரங்களில் ஆதார் நம்பரையும் மறந்து விட்டு, ஆதார் கார்டும் தொலைந்து போகும் பட்சத்தில் இந்த இரண்டு முறைகளும் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications