வங்கிகளில் தனிநபர், வீட்டுக் கடன் போன்ற எந்தவொரு கடனுக்கும் நாம் விண்ணப்பித்தால், அவர்கள் முதலில் நமது கிரெடிட் ஸ்கோரை பார்ப்பார்கள். கிரெடிட் ஸ்கோர் என்பது மூன்று இலக்க எண்ணாகும், இது உங்கள் கடன் வரலாற்றை சுருக்கி, உங்கள் கடன் தகுதியை மதிப்பிட அவர்களுக்கு உதவுகிறது. எனவே உங்கள் கிரெடிட் ஸ்கோர் எப்போதும் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
கிரெடிட் ஸ்கோரும் கடன் தகுதியும் : கிரெடிட் ஸ்கோர் 600க்கும் குறைவாக இருந்தால் உங்கள் கடன் தகுதி மிக மோசம் மற்றும் கடனுக்கு ஒப்புதல் கிடைப்பது மிக கடினம்.

600 முதல் 649 வரை இருந்தால் உங்கள் கடன் தகுதி மோசம் மற்றும் கடன் கிடைப்பதற்காக வாய்ப்புகள் குறைவு.
650 முதல் 699 வரை இருந்தால் கடன் தகுதி திருப்தி மற்றும் கடனுக்கான ஒப்புதல் சாத்தியம்.
700 முதல் 749 வரை இருந்தால் உங்கள் கடன் தகுதி நன்றாக உள்ளது மற்றும் கடனுக்கான ஒப்புதல் பெற வாய்ப்பு அதிகம்.
கிரெடிட் ஸ்கோர் 750க்கு மேல் இருந்தால் உங்கள் கடன் பெறும் தகுதி மிக நன்றாக உள்ளது மற்றும் கடன் பெற மிக அதிக வாய்ப்புள்ளது.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், தனிநபர் கடன்கள் வாங்க சில வழிகள் உள்ளன. குறைந்த கிரெடிட் ஸ்கோருடன் தனிநபர் கடனை பெறுவதற்கான சில டிப்ஸ்களை பார்ப்போம்.
நிலையான வருமானம்: வங்கிகள் உள்ளிட்ட கடன் வழங்குபவர்கள் பெரும்பாலும் நிலையான மற்றும் சீரான வருமான ஆதாரம் கொண்ட கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன. சம்பள சிலிப், வேலைவாய்ப்பு கடிதம் அல்லது வருமான வரி கணக்கு தாக்கல் ஆவணங்கள் போன்ற வேலைக்கான ஆதாரத்தை நீங்கள் வழங்கலாம். நீங்கள் ஒரே நிறுவனத்தில் நீண்ட காலமாக இருந்தீர்கள் என்றால் அது உங்கள் ஸ்திரத்தன்மையை பிரதிபலிக்கிறது.
குறைந்த கடன்- வருமான விகிதம்: உங்களுடைய கடன் வருமான விகிதம் என்பது உங்களுடைய வருமானத்திற்கு எதிரான உங்களுடைய அனைத்து விதமான கடன்களின அளவீடு ஆகும். குறைந்த கடன் விகிதம் இருந்தால், நீங்கள் கூடுதலாக கடன் வாங்கினாலும் அதனை திருப்பி செலுத்தும் அளவுக்கு உங்களுக்கு வருமானம் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
கடன் வழங்குபவர்கள் குறைந்த கடன் விகிதம் உள்ள வாடிக்கையாளர்களையே விரும்புகிறார்கள். எனவே உங்களுடைய கடன் அளவு உங்களுடைய வருமானத்தை விட மிகக் குறைவாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த விகிதத்தை மேம்படுத்த, புதிய கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் ஏற்கனவே உள்ள கடன்களை செலுத்துவதை கருத்தில் கொள்ளுங்கள், இதில் கிரெடிட் கார்டு பாக்கிகள், கார் கடன்கள் அல்லது வேறு ஏதேனும் நிலுவையில் உள்ள கடன்கள் ஆகியவை அடங்கும்.
இணை விண்ணப்பதாரர்: குடும்ப உறுப்பினர் அல்லது மனைவி போன்ற இணை விண்ணப்பதாரருடன் கடனுக்கு விண்ணப்பிப்பது, உங்கள் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். இணை விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானம் உங்கள் சொந்த குறைபாடுகளை ஈடுகட்டலாம். அதேசமயம் கடனை திருப்பி செலுத்துவதில் உங்கள் இருவருக்குமே சமமான பொறுப்பு உள்ளது. இதில் உள்ள பொறுப்புகள் மற்றும் அபாயங்கள் குறித்து இணை விண்ணப்பதாரரிடம் தெரிவித்து விடுங்கள்.
கூடுதல் ஆவணங்கள்: பொதுவான தேவையான ஆவணங்களை தவிர்த்து கூடுதலாக ஆவணங்களை வழங்குவது உங்கள் கடன் விண்ணப்பத்தை வலுப்படுத்தும். வங்கி அறிக்கைகள், பரிந்துரை கடிதங்கள் அல்லது சொத்து சான்றுகள் போன்றவற்றை கூடுதல் ஆவணங்களாக வழங்கலாம். இது உங்களது நிதி நிலவரத்தை விரிவாக மற்றும் வெளிப்படையாக காட்டும் என்பதால், இது கடன் வழங்குபவர்களுக்கு உங்கள் கடன் தகுதி பற்றி அவர்கள் கொண்டிருக்கும் எந்த கவலையையும் தீர்க்க உதவும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications