டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் வலுவான டாலரின் மதிப்பு, பத்திர சந்தை ஏற்றத்திற்கு மத்தியில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது ப்யூச்சர் டிரேடிங்கில் மட்டும் அல்ல, பிசிகல் தங்கத்தின் விலையும் சரிவினைக் கண்டு வருகின்றது.
அதுவும் விழாக்கால பருவத்தில் விலை குறைந்துள்ளது மேற்கொண்டு முதலீட்டாளர்களுக்கும், தங்க ஆர்வலர்களுக்கும் சரியான வாய்ப்பாக பார்கப்படுகிறது.
இந்தியாவின் தீபாவளி திருநாளில் முதல் நாள் தந்தேராஸ் ஆக கொண்டாடப்படுகின்றது. இந்துக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் இந்த விழாவில், தங்கம் வெள்ளி வாங்குவதற்கு உகந்த நாளாகவும் பார்க்கப்படுகிறது.
ரூ.5000 சரிவு
தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக வட்டி இல்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 2000 டாலர்களை தொட்டது. இதற்கிடையில் 10 கிராமுக்கு 55,000 ரூபாயாக தொட்டது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 5000 ரூபாய் சரிவினைக் கண்டுள்ளது.
இனியும் குறையலாம்
இதற்கிடையில் வரவிருக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா வேலை சந்தையும் வலுவடைந்து வரும் நிலையில், இது மேற்கோண்டு தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
தங்கத்தில் அழுத்தம் ஏற்படுத்தலாம்
எனினும் இந்த காலகட்டத்திலும் பணவீக்கம் என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகின்றது. ஆக பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம். இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது சரிவில் காணப்படுகின்றது. இது தங்கம் விலையில் ஏற்ற இறக்கதினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் தங்கம் விலை?
சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 12.25 டாலர்கள் குறைந்து, 1624.35 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
காமெக்ஸ் வெள்ளி விலை?
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 1.59% குறைந்து, 18.395 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று கீழாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது குறைந்து காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 255 ரூபாய் குறைந்து, 49,888 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலை தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது கிலோவுக்கு 615 ரூபாய் குறைந்து, 56,026 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. மீடியம் டெர்மில் இன்னும் சரிவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, 4665 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 37,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 21 ரூபாய் குறைந்து, 5090 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 168 ரூபாய் குறைந்து, 40,720 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து, 50,900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 50 பைசா அதிகரித்து, 61.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 615 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 61,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று - ரூ.46,650
மும்பை - ரூ.46,250
டெல்லி - ரூ.46,350
பெங்களூர் - ரூ.46,300
கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,650
More From GoodReturns

இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்!! அட்சய திருதியை-க்கு ஒரு நாளே இருக்கும் நிலையில் விலை சரிவு!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications