LPG கேஸ் சிலிண்டர்: இன்னும் 5 நாள் தான் டைம்.. மக்களே இத முடிக்கலனா சிலிண்டர் கிடைக்காது..!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான குடும்பங்கள் கேஸ் சிலிண்டரை தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றன. இந்த கேஸ் சிலிண்டரை தடையில்லாமல் பெற வேண்டும் என்றால் பின்வரும் பணிகளை வரும் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம் முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் போகும்.

இந்தியாவில் உஜ்வாலா திட்டம் மற்றும் வழக்கமான கேஸ் இணைப்புகள் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நமக்கு கேஸ் சிலிண்டர்களை வழங்குகின்றன. கடந்த மார்ச் மாதம் ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை அடுத்து சிலிண்டர் விநியோகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. தற்போது நிலைமை சீராகி இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கேஒய்சி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

LPG கேஸ் சிலிண்டர்: இன்னும் 5 நாள் தான் டைம்.. மக்களே இத முடிக்கலனா சிலிண்டர் கிடைக்காது..!!

வீட்டு உபயோகத்திற்காக எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயமாக தங்களது கேஸ் இணைப்பிற்குரிய இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பு பணியை முடிக்க வேண்டும். இதற்கு வரும் 15ஆம் தேதி தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் 15க்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காதவர்கள் சிலிண்டர் புக்கிங் செய்வதிலும், சிலிண்டர் மானியம் பெறுவதிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

Also Read

உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் என்ற அளவில் மானியம் வழங்கப்படும் நிலையில் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் அந்த மானியம் கிடைக்காமல் போகலாம்.போலி மற்றும் தகுதியற்ற கேஸ் இணைப்புகளை கண்டறிந்து நீக்கவே கேஒய்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு வழங்கும் மானியங்கள் உண்மையான மற்றும் தகுதியான பயனர்களுக்கு மட்டுமே போய் சேர்வது உறுதி செய்யப்படும்.

எனவே வாடிக்கையாளர்கள் முதலில் தங்கள் கேஸ் ஏஜென்சியை தொடர்பு கொண்டு கேஒய்சி முடிக்க வேண்டுமா என்பதை கேட்டு கொள்ளுங்கள். தேவையில்லை என்றால் கவலை இல்லை. ஒருவேளை கேஒய்சி செய்ய வேண்டும் என்றால் உடனே அந்த பணியை முடித்து கொள்வது தான் நல்லது.

Recommended For You

நீங்கள் பயன்படுத்துவது இண்டேன் சிலிண்டர் என்றால் IndianOil ONE App பயன்படுத்தி கஸ்டமர் எண் கொடுத்து லாகின் செய்து ஆதார் எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி, முக அடையாள சரிபார்ப்பு ஆகியவற்றை முடித்து கேஒய்சியை நிறைவு செய்யலாம். அதே போல பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் நிறுவனங்களும் செயலிகளை வைத்துள்ளன. இல்லை என்றால் சம்பந்தப்பட்ட கேஸ் சிலிண்டர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

ஆன்லைனில் செய்ய முடியாது என்பவர்கள் தங்கள் கேஸ் ஏஜென்சிக்கே ஆதார் கார்டு, கேஸ் புக்குடன் நேரடியாக சென்று கேஒய்சி சரிபார்ப்பு பணியை செய்து கொள்ளலாம். இதற்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் முடிந்தவரை சீக்கிரமாக வேலையை முடிப்பது நல்லது. இல்லை என்றால் கடைசி நேரத்தில் கேஸ் ஏஜென்சியில் கூட்டத்தில் சிக்கி கொள்ள நேரிடலாம், ஆன்லைனில் ஒரே நேரத்தில் பலர் முயற்சிக்கும் போது சிக்கல் ஏற்படலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+