மும்பை: ஜனவரி மற்றும் மார்ச் உடன் முடிவடைந்த காலாண்டில் தங்கள் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபம் குறித்த விவரங்களை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் ஐடி நிறுவனமான LTI மைண்ட் ட்ரீ (LTI MINDTREE) பங்குதாரர்களுக்கு ஒரு ஈக்விட்டி பங்குக்கு 45 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பங்குச்சந்தையில் LTI மைண்ட் ட்ரீ நிறுவனம் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் , நிறுவனத்தின் நிகர லாபம் 1,100 கோடி ரூபாயாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 1.2 % குறைவாகும். அதேபோல கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது இது 6% குறைவு.
2024 ஆம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் LTI மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் வருவாய் 8,092 கோடி ரூபாயாக உள்ளது. இத்துடன் பங்குதாரர்களுக்கான டிவிடெண்ட் தொகை குறித்து அறிவிப்பையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தங்கள் நிறுவனத்திற்கான ஆர்டர் இன்ஃப்லோ என்பது 15.7% அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேபாசிஸ் சாட்டர்ஜி கூறியுள்ளார்.
இதனை அடுத்து நிறுவனத்தின் வாரிய குழு உறுப்பினர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு ஈக்விட்டி பங்குக்கு 45 ரூபாய் டிவிடெண்ட் ஆக வழங்கப்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த டிவிடெண்ட்டை வழங்குவதற்கான ரெக்கார்ட் டேட் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐடி நிறுவனமான LTI மைண்ட் ட்ரீ டிவிடெண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் கிட்டத்தட்ட ஒரு பங்குக்கு 60 ரூபாய் என்ற அளவில் டிவிடெண்ட் வழங்கியது. LTI மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் பங்கு கடந்த ஐந்தாண்டு காலத்தில் 172.14 % வளர்ச்சியை தந்துள்ளது.
LTI மைண்ட் ட்ரீ நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது ஏப்ரல் 25ஆம் தேதி பங்குச்சந்தையில் 4,636 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1,40,161 கோடி ரூபாயாக உள்ளது. இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ என்பது 675.88 அளவிலும் , ஃபேஸ் வேல்யூ 1 என்ற அளவிலும் இருக்கிறது.
இந்நிறுவனத்தின் பங்குகள் 68.60% ப்ரமோட்டர்களிடமும், 9.95% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களிடமும் உள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் 7.86% பங்குகளையும், உள்ளூர் நிறுவனங்கள் 7.37% பங்குகளையும் கொண்டுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications