லட்சுமி விலாஸ் வங்கி பிரச்சனை.. ரிசர்வ் வங்கி 3 இயக்குனர்கள் கொண்ட குழு நியமனம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லட்சுமி விலாஸ் வங்கியில் புதிதாக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிர்வாகிகளில், 7 பேரை பங்குதாரர்கள் கடந்த வாரம் புறக்கணித்து விட்டனர்.

இந்த நிலையில் ஞாயிற்றுகிழமையன்று ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, லட்சுமி விலாஸ் வங்கியில் மூன்று இயக்குனர்கள் கொண்ட குழுவை (Committee of Directors) நியமனம் செய்துள்ளது. இந்த குழுவானது இவ்வங்கியின் அன்றாட விவகாரங்களை மேற்பார்வையிடுவார்காள் என்றும் கூறியுள்ளது. இந்த குழுவில் மீதா மஹான், சக்தி சின்ஹா, மற்றும் சதிஷ் குமார் ஆகியோர் இடம்பெறுவர்.

லட்சுமி விலாஸ் வங்கி பிரச்சனை.. ரிசர்வ் வங்கி 3 இயக்குனர்கள் கொண்ட குழு நியமனம்..!

 

லட்சுமி விலாஸ் வங்கி அதன் tier one capital ratio of -1.83% ஆக அறிவித்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் லட்சுமி விலாஸ் வங்கியின் டெபாசிட் 21,161 கோடி ரூபாயாகும். இது கடந்த ஆண்டினை விட 27% சரிவாகும். இதே முந்தைய காலாண்டினை விட 1.3% குறைவாகும். இதனால் இனி அதிக நிதியை டெபாசிட்தாரர்களிடம் இருந்து இவ்வங்கி பெற முடியாது. இதே எல்சிஆர் (Liquidity Coverage Ratio) விகிதம் செப்டம்பர் 27 நிலவரப் படி 262% இருந்துள்ளது. ஆனால் ஆர்பியின் குறைந்தபட்ச தேவை 100% ஆகும்.

கடந்த வாரம் லட்சுமி விலாஸ் வங்கியின் 93வது ஆண்டுப் பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்தது. இதில், ஏற்கெனவே பதவியில் இருந்த 7 பேர் மறு நியமனம் உட்பட 10 இயக்குநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் தான், ஏற்கெனவே வங்கி நிர்வாகத்தில் இருந்த நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சுந்தர், இயக்குநர்கள் என்.சாய் பிரசாத், கே.ஆர்.பிரதீப் பிகே மஞ்சு நாத், ஓய் என் லட்சுமி நாரயண மூர்த்தி உட்பட 7 பேருக்கு எதிராக பங்குதாரர்கள் வாக்களித்துள்ளனர். இதுபோல சட்டமுறை தணிக்கை அதிகாரியான பி சந்திரசேகரருக்கும் எதிராக வாக்களித்துள்ளனர்.

லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகத்தில் தடுமாற்றம்.. சிஇஓ நீக்கம்.. ரிசர்வ் வங்கி தலையீடு..!

ஏற்கனவே மோசமான வராக்கடன் அதிகரிப்பு போன்ற கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள உள்ள லட்சுமி விலாஸ் வங்கியை, இந்தியா புல்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் இந்த இணைப்பை ரிசர்வ் வங்கி இங்கு நிராகரித்து விட்டது.

இந்த வங்கியின் மூலதன தேவை விகிதம் 1.12 சதவீதமாக உள்ளது. சட்ட விதிகளின்படி 8 சதவீதம் இருக்க வேண்டும். வராக்கடன் 25.39 சதவீதமாக உள்ளது. தற்போது, இந்த வங்கியை கிளிக்ஸ் கேபிடல் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் வங்கி நிறுவனர்கள் உட்பட பழைய நிர்வாகத்தில் இருந்தவர்களின் மறு நியமனத்துக்கு எதிராக பங்குதாரர்கள் வாக்களித்துள்ளது சற்று கவலையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது, ஏனெனில் இந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு இணைப்பில் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LVB crisis: Reserve bank appoints committee of directors to run day to day affairs

Reserve bank of India approves 3-member committee of directors to manage LVB
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X