500 சவரன் தங்க நகைகள் கொள்ளை? மதுரை தனிஷ்க் நகை கடையில் கொள்ளை சம்பவம் நடந்தது எப்படி?

டாடா குழுமத்துக்கு சொந்தமான தனிஷ்க் நிறுவனம் இந்தியா முழுவதும் தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் பிரதான நகரங்களில் தனிஷ்க் நகை கடைகள் செயல்படுகின்றன. அப்படி மதுரையில் செயல்படும் தனிஷ்க் நகை கடையில் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.

மதுரை காளவாசலில் தனிஷ்க் நகை கடை செயல்பட்டு வருகிறது. இங்கே நேற்று வழக்கம் போல வேலையை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவில் அந்த கடையில் புகுந்து சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

500 சவரன் தங்க நகைகள் கொள்ளை? மதுரை தனிஷ்க் நகை கடையில் கொள்ளை சம்பவம் நடந்தது எப்படி?

மதுரை புறவழிச்சாலையில் காளவாசல் பகுதியில் உள்ள இந்த கடையை வழக்கம்போல் கடையின் ஊழியர்கள் இன்று காலை திறந்து பார்த்தபோது கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில் முகமுடி அணிந்த மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு கடைக்குள் புகுந்து கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட தகவல்படி, சுமார் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், கொள்ளையர்கள் கடையின் பிரதான வழியில் நுழையாமல் மேல் தளம் வழியாக நுழைந்திருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பாக லிஃப்ட்க்காக உள்ள பாதை வழியே உள்ளே நுழைந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Also Read

புகாரை தொடர்ந்து, அந்த நகை கடைக்கு சென்ற காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் குழுவினரின் கடைக்கு வருகைதந்து சோதனை செய்தனர்.

Recommended For You

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் இந்த நகை கடை திறக்கப்பட்டது. இன்னும் கட்டுமான பணிகளே முடிவடையாமல் இருப்பதாக சொல்லபப்டுகிறது. இந்த சூழலில் தான் நகைகள் திருடு போயுள்ளன. முகமூடி அணிந்த ஒரு நபர் கடையில் நுழைந்ததாகவும் சுமார் 3 பேர் குழுவாக இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது.

புதிதாக திறக்கப்பட்ட கடை , கட்டுமான பணிகள் முழுமை அடையாமல் இருப்பது ஆகியவற்றை நோட்டமிட்டு திட்டமிட்டே இந்த நகை கொள்ளை அரங்கேறி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+