வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் ஜனவரி 3, 2026 அன்று கைது செய்தது உலக பொருளாதாரத்தில் குறுகிய கால அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா OPEC+ உறுப்பு நாடாகவும், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடாகவும் இருப்பதால், சர்வதேச எரிசக்தி சந்தைகளில் கடுமையான தடுமாற்றம் ஏற்பட உள்ளது. எண்ணெய் விலையில் பெரும் மாற்றம் இப்போது உருவாகியுள்ளது. இருப்பினும், நீண்ட கால தாக்கம் குறைவாக இருக்கும், இதேபோல் இந்தியா மீதான நேரடி தாக்கமும் குறைவாவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் சந்தை
வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஏற்கனவே பல்வேறு வர்த்தக தடைகளால் இதன் வர்த்தகம் குறைந்துள்ளது. அமெரிக்காவுக்கு செவ்ரான் மூலம் நாளொன்றுக்கு 1,20,000 பேரல்கள் மட்டுமே செல்கிறது. இந்த கைது சம்பவத்தால் ஏற்படும் அரசியல் குழப்பம் இந்த ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.
இதனால் எண்ணெய் விலையில் வெனிசுலா வரத்து குறையும் காரணத்தால் இதன் விலை உயரும். இருப்பினும், அமெரிக்க தலைமையில் புதிய நிலையான அரசு வந்தால் உற்பத்தி அதிகரித்து விலை குறையலாம்.
OPEC+ அமைப்பு ஜனவரி 4ஆம் தேதி திடீர் கூட்டத்தை நடத்தி தனது உற்பத்தியை அதிகரித்து பற்றாக்குறையை தடுக்கலாம். ஆனால் உடனடி மாற்றம் நடக்குமா என்பது அடுத்த முக்கியமான கேள்வியாக உள்ளது.
நிதி சந்தைகளில் தாக்கம்
கச்சா எண்ணெய் தாண்டி சர்வதேச பங்குச்சந்தை மற்றும் காமாடிட்டி சந்தைகள் ஜனவரி 5 திங்களன்று இதன் பாதிப்பு எதிரொலிக்காலம். குறிப்பாக தங்கம், வெள்ளி விலை உயரலாம். கச்சா எண்ணெய் ஃப்யூச்சர்ஸ் மற்றும் எரிசக்தி துறை பங்குகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம்.
இதேவேளையில் லத்தீன் அமெரிக்காவில் உள்ள வளரும் நாடுகளின் பங்குச்சந்தை பாதித்து இதன் வட்டி விகிதங்கள் உயரலாம். இருப்பினும், அமெரிக்கா தலைமையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தால் இந்த தடுமாற்றம் குறையலாம்.


Click it and Unblock the Notifications