சென்னை: தமிழ்நாடு அரசு வழக்கமாக பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசு தொகையாக வழங்குகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிலும் பொங்கல் பரிசு தொகை தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஏற்கனவே அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகள் இந்த பொங்கலுக்கு உரிமை தொகை மட்டும் இல்லாமல் பொங்கல் பரிசு தொகையான 1000 ரூபாயையும் சேர்த்து 2000 ரூபாயை பெறுவதற்கான வாய்ப்பை பெற உள்ளார்கள்.

பொதுவாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு பல பெண்களும் தங்களுடைய பொங்கல் பரிசு தொகையோடு சேர்ந்து மகளிர் உரிமை தொகையாகவும் மொத்தம் 2000 ரூபாயை பெற்றனர்.
அந்த வகையில் நடப்பாண்டிலும் அதே வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 15ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. அது நேரடியாக ரேஷன் கடை வாயிலாக வழங்கப்பட்டது. இதனால் மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் மகளிர் இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 2000 ரூபாயை அரசு தரப்பிலிருந்து பெற்றனர்.
வரக்கூடிய பொங்கல் பண்டிகையின் போதும் அரசு 1000 ரூபாய் தொகையை வழங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையும் இந்த பெண்களுக்கு கொண்டாட்டம் மிகுந்த பண்டிகையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை பொங்கலின் போது 15ஆம் தேதி பண்டிகை என்பதால் வழக்கமாக பணம் போடப்படும் 15ஆம் தேதிக்கு முன்னதாகவே மகளிர் உரிமை தொகை பயனாளிகளுக்கு 1000 பணம் வரவு வைக்கப்பட்டது. இந்த முறையும் அதே பின்பற்றப்படும் என சொல்லப்படுகிறது.
அதோடு புதன்கிழமை வெளியான அறிவிப்பின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என தமிழக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து குடும்ப தலைவிக்கும் புதிய நிதி பலத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications