மிசோரம்: வங்கி சாராத நிதி நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீஸ் நிறுவனம் அண்மையில் மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் வடகிழக்கு இந்தியாவில் தங்களுடைய ஒரு கிளையில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது கண்டுபிடித்திருப்பதாக கூறியுள்ளது.
குறிப்பாக சில்லறை வாகன கடன்கள் வழங்குவது மற்றும் வாடிக்கையாளர்களின் கேஒய்சி டாக்குமெண்ட்களை பதிவு செய்வது ஆகியவற்றில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தங்களது தலைமை அலுவலகம் அளித்த புகாரின் பேரில் மிசோரம் காவல்துறையினர் பலரை கைது செய்திருப்பதாகவும் மோசடி குறித்த தகவல்களை விசாரணை நடந்து வருவதாகவும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் மற்றும் கார் டீலர்கள் ஆகியோர் இணைந்து இந்த மோசடியை நடத்தியுள்ளனர் மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சர்க்கிள் ஹெட் ஆக இருக்கக்கூடிய அங்கீத் பாக்ரி என்பவர் எய்ட்ஸ்வால் காவல் நிலையத்தில் மார்ச் 20ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
தங்களுடைய ஏரியா பிசினஸ் மேனேஜர், மிசோரத்தை சேர்ந்த ஜாகிர் ஹுசைன் மோசடி செய்ததாக புகாரில் கூறியுள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் கடந்த 29ஆம் தேதி அவர் மீது புகார் பதிவு செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மிசோரம் காவல்துறையினர் வெளியிட்ட தகவலின் படி ஹுசைன் மற்றும் சில ஊழியர்கள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது மஹிந்திரா ஃபைனான்ஸ் லிமிடெட் என்ற பெயரில் மிசோரம் ரூரல் வங்கியில் ஒரு போலியான வங்கி கணக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளனர். உசேனும் மற்ற இரண்டு பேரும் போலியான ஆவணங்களை இதற்காக தயார் செய்துள்ளனர்.
மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பெயரில் ஆவணங்களை தயார் செய்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக மோசடி செய்த பணத்தை இந்த கணக்கில் அவர்கள் வைத்துள்ளனர்.
குறிப்பாக கார் டீலர்களிடமிருந்து பணத்தை பெறுவதற்கு இந்த வங்கி கணக்கை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். போலியான ஸ்டாம்புகள், போலியான சீல்கள் ஆகியவற்றை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 11 பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர்.
ஜாகிர் உசேன் போலியான ஆவணங்களை தயார் செய்து போலியான வாடிக்கையாளர்களை உருவாக்கி கிட்டத்தட்ட 2000 வாகன கடன்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். பின்னர் போலி வங்கி கணக்கிலிருந்து இந்த கடன்களுக்கான இஎம்ஐ வருவது போல பதிவு செய்துள்ளார்.
இந்த மோசடியில் உதவி செய்வதற்காக 15,000 ரூபாய்க்கு மனோஜ் சுனார் என்பவரை வேலைக்கு வைத்துள்ளார். ஜாகிர் உசேன் இதற்காக கேஒய்சிக்கு போலியான ஆவணங்களை தயாரித்து அப்டேட் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது . போலி கடன்களை பெற வாகன டீலர்களுக்கும் ஒரு தொகையை கமிஷனாக வழங்கியுள்ளார்.
மஹிந்திரா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான சுரேஷ் கணபதி 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் எதிர்பார்த்த லாபத்தில் 15 சதவிகிதம் குறைந்து இருப்பதை கண்டுள்ளார்.
இதனை அடுத்து அனைத்து கிளைகளிலும் நடத்தப்பட்ட தணிக்கையின் இவ்வாறு போலியாக வாகன கடன்களை வழங்கியதை கண்டுபிடித்துள்ளார். இதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில் அனைத்துமே போலியான வாகன கடன்கள் என தெரிய வந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications