இந்தியாவின் முன்னணி நகை கடைகளில் ஒன்றான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனம் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மார்ச் மாத இறுதிக்குள் 20 புதிய ஷோரூம்களை திறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்திற்காக மொத்தம் ரூ.1,580 கோடி முதலீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 725-க்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என நிறுவனம் கூறியுள்ளது.

இன்று சென்னை ரீடைல் சந்தையில் தங்க விலையில் சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.66 குறைந்து ரூ.15,982 ஆக உள்ளது. அதேபோல், 22 காரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ரூ.14,650 ஆக உள்ளது. மேலும், 18 காரட் தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ரூ.12,330 ஆக உள்ளது. தங்க விலைகளில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு நகை வாங்க விரும்புவோருக்கு சிறிய நிவாரணமாக உள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்து சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருக்கும் காரணத்தால் மக்கள் இனி தங்க நகையை வாங்க மாட்டார்கள் என ஒரு கூட்டம் கூறிவந்தாலும். நீண்ட கால முதலீட்டுக்கும், சேமிப்புக்கும் தங்கம் தான் முக்கியம் என்பதை ஒவ்வொரு உலகளாவிய பிரச்சனையின் போதும் நிரூபணமாகிறது. இதனால் தங்கம் விலை எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் வாங்குவதை நிறுத்த மாட்டார்கள் என்பதை நம்பியே மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிய ஷோரூம்களை திறப்பது மூலம் விளங்குகிறது.
தங்கம் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் நகை வாங்குவதை குறைக்கவில்லை, மாறாக நகை வாங்கும் முறையை மாற்றியுள்ளனர். அதாவது 22 கேரட் தங்க நகைகளுக்கு பதிலாக 18 கேரட் நகைகள், அதிக கற்கள் கொண்ட நகைகள், லைட் வெயிட் நகைகள், வெள்ளி நகைகள், வெள்ளி நகையில் தங்கம் பூசப்பட்ட நகைகள் என பல வகையில் தற்போது மக்கள் நகைகளை வாங்க துவங்கியுள்ளனர். இதனால் நகைக்கான டிமாண்ட் இந்தியாவில் குறையவில்லை.
20 புதிய ஷோரூம்கள்
மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனம் இந்த 20 புதிய ஷோரூம்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள நகரங்களில் திறக்கப்பட உள்ளன. ஜான்சி, கள்ளக்குறிச்சி, குவாலியர், சித்தூர், ஹல்த்வானி, தேனி, ஜாம்நகர், ராஞ்சி, கொல்கத்தா விஐபி சாலை, அலிகார், கேஆர் புரம் (பெங்களூரு), இனோர்பிட் மால் விசாக், காஞ்சரபாரா, சேரம்பூர், கோகுல் ரோடு ஹூப்ளி, மணிநகர், குருகிராம் செக்டர் 14, ஜூபிலி ஹில்ஸ் (ஹைதராபாத்), சங்கரெட்டி மற்றும் குவஹாத்தி ஆகிய இடங்களில் இதற்கப்படுகிறது.
மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் இந்த முறை டார்கெட் செய்யப்பட்டுள்ள இடங்கள் பெரும்பாலும் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களாக உள்ளது. இது நகை கடை பிராண்டுகளின் புதிய வர்த்தக உக்தியாக பார்க்கப்படுகிறது. பொதுவாக பெரு நகரங்களில் இந்த பிராண்டுக்கு பெரிய மவுசு உள்ளது, இதை அடிப்படையாக வைத்து சிறிய நகரங்களிலும் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில் இருக்கும் சிறிய பிராண்டுகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த 20 புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்ட பிறகு, மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஷோரூம்கள் எண்ணிக்கை 445-ஆக உயரும். இதன் மூலம் இந்நிறுவனம் சுமார் 14 நாடுகளில் கடைகள் உடன் வர்த்தகம் செய்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவனத்தின் கடைகள் இருக்கும்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications