வீட்டிலிருந்தே வேலை வாய்ப்பு தருவதாக கூறி மக்களின் பணத்தை பறிக்கும் செயல்கள் தற்போது அதிகரித்துள்ளன. கோவிட் காலத்திற்குப் பிறகு தான் இந்த "ஒர்க் ப்ரம் ஹோம் கல்ச்சர்" அதிகரிக்கத் தொடங்கியது. அதையே யுக்தியாக பின்பற்றி தற்போது அப்பாவி மக்களின் பணத்தை அபகரித்து வருகின்றனர். அப்படித்தான் ஒரு சம்பவம் மலேசியாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்துள்ளது. மலேசியாவின் பஹாங்கில் உள்ள பெராவைச் சேர்ந்த 38 வயதான இல்லத்தரசி, இந்த மாத தொடக்கத்தில் சமூக ஊடக தளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து ஒரு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அப்படி விண்ணப்பித்த வேலையின் மூலம் ரூ. 27.3 லட்சத்தை இழந்துள்ளார்.
டிசம்பர் 13-ஆம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு டெலிகிராம் மூலம் "ஹேண்ட் கிராப்ட் குரூப் 049" என்ற குரூப்பில் இணைந்துள்ளார். இது ஒரு ஆன்லைன் வேலை வாய்ப்பு தளம் போல இருந்துள்ளது. அப்போதுதான் இந்த மோசடி சம்பவம் அரங்கேற தொடங்கியுள்ளது. பல்வேறு தயாரிப்புகளை தயார் செய்து விற்பனை செய்யும் தளமாக இந்த தளம் காண்பிக்கப்பட்டுள்ளது. வேலைகளை செய்து முடித்தால் கணிசமான லாபத்தை தருவதாகவும் நிறுவனத்தின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை தொடர்பான லிங்குகள் வழங்கப்பட்டன. ஆனால் மோசடிக்காரர்கள் அந்தப் பெண்ணின் வேலையில் பிழை இருப்பதாக கூறி அவர் செய்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் செய்த வேலையில் உள்ள சில சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு பணம் அனுப்பும்படி மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். அதற்கு ஏதுவாக இந்தப் பெண்ணும் தனித்தனி வங்கி கணக்குகளில் இருந்து 28 பரிவர்த்தனைகளின் மூலம் சுமார் 9 வங்கி கணக்குகளுக்கு தனது பணத்தை அனுப்ப தொடங்கியுள்ளார்.
அதன் பிறகு அவர் வேலை செய்யும் தளத்தில் ரூ.38.0614 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக காண்பிக்கப்பட்டுள்ளது. அதை அந்தப் பெண் திரும்ப பெற முயன்றுள்ளார். ஆனால் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. அப்போதுதான் தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதை உணர்ந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது தனிப்பட்ட சேமிப்பு கணக்கில் இருந்த பணம் அனைத்தும் பறிபோனது. இந்த மோசடி சம்பவத்தின் காரணமாக டிசம்பர் 25-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அதிக வருமானத்துடன் எளிதான பணிகளை உறுதியளிக்கும் எந்த ஒரு வேலையையும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இன்றெல்லாம் மோசடிக்காரர்கள் தாங்கள் உருவாக்கிய தளங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக வருமானம் தருவதாக காண்பிக்கின்றனர். தற்போது பயன்படுத்தப்படும் யுக்திகளில் இதுவும் ஒன்று. இதை பார்க்கும் மக்கள் தங்களுக்கு வருமானம் அதிகமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் சொல்வதற்கெல்லாம் செவிசாய்கின்றனர். எனவே இது போன்ற வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications