இந்திய மக்களின் நிதி நிலைமைக்கு ஏற்ப அவர்களின் செலவிடும் பழக்கம் மாறி வருகிறது, இதற்கு முக்கியமான உதாரணமாக ஷாப்பிங் மால்களில் இருக்கும் மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. கடந்த சில வருடமாக வேலைவாய்ப்பு சந்தையும், மக்களின் வருமானத்திலும் பெரிய அளவிலான முன்னேற்றம் இல்லாத இதேவேளையில், விலைவாசியும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
மக்கள் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் பல செலவுகளை கடந்த ஒரு வருடத்தில் குறைத்துள்ளனர். இதில் முக்கியமான விஷயமாக இருப்பது ஷாப்பிங் மால்களில் இருக்கும் மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்களுக்கு செல்வது. இந்த தியேட்டர்களில் டிக்கெட் விலை என்னவோ 150 முதல் 450 ரூபாய் வரையில் தான் உள்ளது.

ஆனால் மற்ற அனைத்து செலவுகளும் அதிகம், வீட்டில் இருந்து தியேட்டருக்கு செல்லும் கேப் செலவு முதல், சொந்த வாகனமாக இருந்தால் பார்கிங் கட்டணம், மால்களில் இருக்கும் உணவுகளின் விலை, தியேரட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்ன் மற்றும் பிற ஸ்னாக்ஸ் வகைகள் வரையில் அனைத்தின் விலையும் அதிகமாகவே உள்ளது.
இதனால் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்கு வருவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இது மல்டிபிளக்ஸ் நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் மால் உரிமையாளர்களுக்கும் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. எப்படி தெரியுமா..? வாங்க முழு பிரச்சனையை தெரிந்துக்கொள்வோம்.
மால்களில் இருக்கும் சினிமா தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைவது மூலம் மால் உரிமையாளர்களின் வருமானம் குறைந்து வருகிறது. இதனால் மால் உரிமையாளர்கள் தியேட்டருக்கு ஒதுக்கப்படும் இடங்களை கூட குறைக்க திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு முக்கியமான காரணமும் உண்டு.
பொதுவாக மால்களில் இருக்கும் தியேட்டர்கள் அனைத்தும் மால் உரிமையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாக கொடுத்தாலும், வருமானத்தில் ஒரு பங்கை மால் உரிமையாளர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த நிலையில் மக்களின் வருகை எண்ணிக்கை குறைவதால் மால்களின் வருமானமும் குறையும்.
இதனாலேயே தியேட்டருக்கு ஒதுக்கப்பட்டும் இடத்தை குறைத்து இதை அட்ஜெஸ்ட் செய்யும் பணிகள் தற்போது இந்தியாவில் பல மால்களில் நடக்கிறது. இதேபோல் புதிதாக கட்டப்படும் மால்களிலும் தியேட்டர்களுக்கும் குறைவான இடத்தை ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் PVR INOX நிறுவனம் மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது 200 தியேட்டர்களை மூடும் திட்டத்தை சிறிது காலம் ஒத்திவைக்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தது. இதற்கு முக்கிய காரணம் பாக்ஸ் ஆபிஸ்-ல் இருக்கும் தடுமாற்றம் தான்.
இந்திய அளவில் பார்த்தால் சமீபத்தில் ஷாருக்கான் நிடித்த பதான் படம் தான் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி பெரிய லாபத்தை அனைத்து தரப்பினருக்கும் அளித்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்த்த தி கேரளா ஸ்டோரி படம் 200 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இந்த தடுமாற்றத்தை வைத்து தான் 200 தியேட்டர்களை மூடும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது.
இதோடு மால்களில் ஒருவர் படம் பார்க்க வேண்டுமெனில் குறைந்தது 800 முதல் 1500 ரூபாய் வரையில் செலவாகிறது. இதுவே குடும்பமாக சென்று படம் பார்க்க வேண்டுமெனில் குறைந்தது 4000 முதல் 5000 ரூபாய் வரையில் செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்து மக்கள் பார்க்க தயாராக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இதனாலேயே மல்டிபிளக்ஸ்-க்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உதாரணமாக PVR INOX தியேட்டர்களின் மக்களின் எண்ணிக்கை 2022-23 ஆம் ஆண்டில் 140 மில்லியனாக குறைந்துள்ளது. 2019-20ல் இதன் எண்ணிக்கை 168 மில்லியனாக இருந்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications