ஆன்லைன் ஸ்டாக் டிரேடிங்கில் ரூ. 26 லட்சம் அபேஸ்! படித்தவர்களே இப்படி ஏமாந்தால் என்னதான் செய்றது!

சில காலமாகவே அதிக அளவில் சைபர் மோசடிகள் நடந்து வருகின்றன. அதற்கு ஏதுவாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுவும் இது போன்ற மோசடிகளில் மக்கள் லட்சக்கணக்கில் தான் இதுவரையில் ஏமாந்துள்ளனர். ஆள் பேர் தெரியாத நபர்களிடம் எப்படி தான் இவ்வளவு பெரிய தொகையை இழக்கின்றனர்? என்பது இன்று வரையில் புரியாத புதிராகத் தான் இருக்கிறது. அப்படித்தான் மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையில் லோஹேகானைச் சேர்ந்த 43 வயதான நபரிடம் ரூ. 25.95 லட்சத்தை மோசடி செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்செயலாக சோசியல் மீடியா பயன்படுத்திக் கொண்டிருக்கையில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் டிரேடிங் தொடர்பாக தெரியாத நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஸ்டாக் டிரேடிங்கில் ரூ. 26 லட்சம் அபேஸ்! படித்தவர்களே இப்படி ஏமாந்தால் என்னதான் செய்றது!

இதை நம்பி பாதிக்கப்பட்ட நபரும் டிரேடிங் கற்றுக் கொள்ள அந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். இது மோசடிக்காரர்களின் வலை என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. லிங்கை கிளிக் செய்த சிறிது நேரத்தில் மோசடிக்காரர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் பாதிக்கப்பட்ட நபரை சமரசம் செய்து ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யும்படி கூறியுள்ளார்.

அந்த அப்ளிகேஷனில் சிறு தொகையை முதலீடு செய்தால் அதிக அளவில் வருமானம் வரும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பி முதலில் பாதிக்கப்பட்ட நபரும் சிறு தொகையை முதலீடு செய்துள்ளார். அதற்கு அதிக அளவு வருமானம் கிடைத்தது போல ஸ்கிரீனில் காண்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகளில் இதுவும் ஒன்று. அதாவது தங்களுக்கென பிரத்தியேகமாக ஒரு தளத்தையோ அல்லது அப்ளிகேஷனையோ உருவாக்கிக் கொள்கின்றனர். அதன் பிறகு பாதிக்கப்படும் அப்பாவி மக்களை அதில் முதலீடு செய்ய வைக்கின்றனர்.

சில நாட்கள் கழித்து முதலீட்டுக்கு அதிக வருமானம் கிடைத்தது போல காண்பிக்கின்றனர். உடனே தங்களுக்கு வருமானம் கிடைத்துவிட்டதாக நம்பி மக்களும் பணத்தைத் தொடர்ந்து முதலீடு செய்யத் தொடங்குகின்றனர். அதன் பிறகு தங்களுக்கு கிடைத்த வருமானத்தை எடுக்க முயற்சி செய்யும் போது தான், இது போன்ற மோசடி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது.

இதே யுக்தி தான் இந்த மோசடி சம்பவத்திலும் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் இதனால் ரூ.25.95 லட்சத்தை மோசடிக்காரர் சொன்ன அப்ளிகேஷனில் முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு தனக்கு கிடைத்த வருமானத்தை எடுக்க முயற்சி செய்யும்போது தான் இது மோசடி என்பது தெரியவந்துள்ளது. உடனே அவர் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது புதிதல்ல.

இதற்கு முன்னரும் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. எப்படி தான் தெரியாத நபர்களிடம் சிக்கி அதிகளவிலான பணத்தை இழக்கின்றனர் என்பது இன்றுவரை யாருக்குமே புரியாத ஒன்றாக இருக்கிறது. விழிப்புணர்வைத் தவிர இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க வேறு வழியே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+