தங்கம் விலை உயர்வால் தங்க நகை கடன் பெறுவோர் எண்ணிக்கை எப்போது இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. தங்க நகை கடனில் வங்கிகளை காட்டிலும் அதிக சந்தை பங்கீட்டை கொண்டு இருக்கும் NBFC-களில் மிகவும் முக்கியமானது மணப்புரம் ஃபைனான்ஸ்.
கேரளா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பல இடங்களில் தங்க கடன் உட்பட பல்வேறு நிதி சேவைகளை வழங்கி வரும் முன்னணி NBFC நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ VP நந்தகுமார்-க்கு சொந்தமான 143 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மணப்புரம் ஃபைனான்ஸ்-க்கு சொந்தமான பல இடங்களில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்திய நிலையில் வியாழ்க்கிழமை இந்த சோதனையின் முடிவுகளையும், சொத்துகளை கைப்பற்றிய விபரங்களையும் வெளியிடப்பட்டு உள்ளது.
அமலாக்க இயக்குனரகத்தின் இந்தத் சோதனையின் முடிவில், மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கொண்டுள்ள திருச்சூரில் சுமார் 6 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நந்தகுமார் பொதுமக்களிடம் இருந்து "சட்டவிரோத" டெபாசிட் வசூல் செய்துள்ளது மூலம் பணமோசடி செய்ததாக அமலாக்க இயக்குனரக குற்றம் சாட்டியுள்ளது.

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ VP நந்தகுமார் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகையை அசையா சொத்துக்களில் முதலீடு செய்து அவருடைய பெயர், மனைவி மற்றும் அவருடைய குழந்தைகளில் பெயரில் பதிவிடப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் சில பகுதி பணத்தை மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளதையும் இந்த சோதனையில் அமலாக்க துறை கண்டுப்பிடித்துள்ளது.
இதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் விபி நந்தகுமாரின் சொத்துக்களை அமலாக்க துறை முடக்கியுள்ளது. அமலாக்க துறை முடக்கப்பட்ட மொத்த சொத்துக்களின் மதிப்பு 143 கோடி ரூபாய், இதில் எட்டு வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை, பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகள் மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகளில் முதலீடு ஆகியவை அடங்கும்.
அமலாக்க துறையின் சோதனை நடவடிக்கையின் போது பணமோசடி தொடர்பாகவும், 60 அசையா சொத்துகளின் சொத்து ஆவணங்களை கைப்பற்றப்பட்டன, இது குற்றச்சாட்டுகளை உறுதி செய்வதாகவும் கூறுகிறது.
ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி வி பி நந்தகுமார் மணப்புரம் அக்ரோ ஃபார்ம்ஸ் (மேக்ரோ) என்ற தனது தனி நிறுவனம் மூலம் வி பி நந்தகுமார் செய்த பணமோசடி மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட டெபாசிட் வடிவில் பெரிய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களையும் அமலாக்க துறை மீட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications