பொதுவாக பணக்கார வீட்டு திருமணம் என்றாலே அதிகப்படியானோரின் கவனம் பெறும், ஆனால் மானசியின் திருமணத்தை ஒட்டுமொத்த இந்திய வர்த்தக சாம்ராஜ்ஜியமும் வியந்து பார்த்தது. சரி யார் இந்த மானசி..? இவருடைய திருமணத்தை இந்திய தொழிற்துறை வியந்து பார்க்க என்ன காரணம்..?
பொதுவாக பிரலங்கள் திருமணம் என்றாலே அதிகப்படியான கவனம் பெறும், நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் துவங்கி ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தா, ஈஷா அம்பானி - ஆனந்த் பிராமல் ஆகியோரின் திருமணம் வரையில் ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்த்தது.

இதைவிட பிரம்மாண்டமாக இந்தியாவின் 3 மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜிய குடும்பங்கள் மானசியின் திருமணத்தில் ஒன்று கூடியது குறிப்பிடத்தக்கது. மானசியின் இருந்த திருமணத்தில் டாடா குடும்பம், மிஸ்திரி குடும்பம், கிரிலோஸ்கார் குடும்பங்கள் இணைந்தது.
இந்தியாவில் டோயோட்டா நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கும் கிரிலோஸ்கார் சாம்ராஜ்ஜியத்தின் முன்னாள் தலைவரும் மறைந்த விக்ரம் கிரிலோஸ்கார்-ன் மகள் தான் மானசி. கிரிலோஸ்கார் சாம்ராஜ்ஜியத்தில் மானசி 5வது தலைமுறையாகும்.
மானசி திருமணம் செய்துக்கொண்டது நெவில் டாடா, இவர் ரத்தன் டாடா-வின் சகோதரரான நோயல் டாடா-வின் மகன் ஆவார். நெவில் டாடா-வின் தாயார் ஆலு மஸ்திரி, மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரி ஆவார். நோயல் டாடா தற்போது டிரெண்ட் நிறுனத்தின் தலைவராக உள்ளார், மிஸ்திரி குடும்பம் டாடா ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர் ஆகும்.

மானசி கிரிலோஸ்கார் மற்றும் நெவில் டாடா அதிகம் வெளியுலகிற்கு தெரியாதவர்கள். மானசி கிரிலோஸ்கார் அமெரிக்காவில் ரோடு ஐலான்ட் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தற்போது டோயோட்டா கிரிலோஸ்கார் நிறுவனத்தில் பல முக்கிய பிரிவுகளை நிர்வாகம் செய்து வருகிறார் மானசி.
மானசி கிரிலோஸ்கார் மற்றும் நெவில் டாடா கொரோனாவுக்கு முன்பு அதாவது 2019ல் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் பிரம்மாண்டங்களை விரும்பாத காரணத்தால் குடும்பத்தின் நெருக்கமானவர்கள் மட்டுமே அழைத்து திருமணம் செய்துக்கொண்டனர். மானசி திருமணத்தின் மூலம் 3 வர்த்தக சாம்ராஜ்ஜிய குடும்பங்கள் நெருங்கியது மட்டும் அல்லாமல் பின்னிப்பிணைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications