மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமத் தலைவர் ரஞ்சன் பாய், பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள எட்டெக் நிறுவனமான பைஜூஸ் குழுமத்தின் முக்கிய துணை நிறுவனமான ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சுமார் ரூ.1,400 கோடி முதலீடு செய்துள்ளார்.
பெங்களூரை தலைமையிடமாக கொண்ட பைஜூஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட்சன் கெம்ப்னர் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனத்திடம் ஆகாஷ் கல்வி நிறுவன பங்குகளை அடமானமாக வைத்து பெற்ற கடன் இந்த புதிய நிதியுதவி மூலம் தீர்க்கப்பட்டு உள்ளது. இதனால் பைஜூஸ் நிறுவனத்தின் முக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த 1400 கோடி ரூபாய் முதலீட்டின் வாயிலாக ரஞ்சன் பாய் தலைமையிலான மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமம் ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் 25 முதல் 30 சதவீத பங்குகளையும், ஆகாஷ் நிர்வாக குழுவில் இரண்டு இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. இதன் மூலம் மணிப்பால் கல்வி மற்றும் மருத்துவக் குழுமம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
மணிப்பால் நிறுவனம் டேவிட்சன் கெம்ப்னர் நிறுவனத்திற்கு இருதரப்பு கடன் பரிவர்த்தனை மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரஞ்சன் பாய், டேவிட்சன் கெம்ப்னர் வைத்திருந்த ஆகாஷின் அனைத்து மாற்ற முடியாத கடன் பத்திரங்களையும் (NCDs) வெள்ளிக்கிழமை NSE Cbrics தளத்தில் வாங்கினார்.
மேலும் இந்த முதலீடு, கடன் பத்திரங்கள் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான ஒப்புதலை பெற மணிப்பால் நிறுவனம் உடனடியாக CCI அமைப்பிடம் பெறும் முயற்சியில் இறங்க உள்ளது. ரஞ்சன் பாய் செலுத்திய 1400 கோடி ரூபாயில் பைஜூஸ் நிர்வாகம் டேவிட்சன் கெம்ப்னர் நிறுவனத்திடம் இருந்து பெற்ற 800 கோடி ரூபாய் கடனும், 600 கோடி ரூபாய் வட்டியும் அடங்கும். வட்டி தொகை மட்டும் வாங்கிய கடனில் 75 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
ரஞ்சன் பாய் தலைமையிலான மணிப்பால் நிறுவனத்தின் முதலீடு ஆகாஷ் நிறுவனத்தை சார்ந்தது, பைஜூஸ்-ன் தாய் நிறுவனமான Think and Learn நிறுவனத்தில் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications